ஆர்.டி.ஐ., சட்ட திருத்தம் சோனியா கடும் எதிர்ப்பு

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி,: 'ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒழிப்பதற்காகவே, மத்திய அரசு, அது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றிஉள்ளது' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாதெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சில திருத்தங்கள் செய்து, அது தொடர்பான மசோதாவை, சமீபத்தில் லோக்சபாவில் மத்திய அரசு நிறைவேற்றியது. தகவல் அறியும் உரிமை
ஆர்.டி.ஐ., சட்ட திருத்தம் சோனியா கடும் எதிர்ப்பு

புதுடில்லி,: 'ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒழிப்பதற்காகவே, மத்திய அரசு, அது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றிஉள்ளது' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாதெரிவித்துள்ளார்.


latest tamil news


தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சில திருத்தங்கள் செய்து, அது தொடர்பான மசோதாவை, சமீபத்தில் லோக்சபாவில் மத்திய அரசு நிறைவேற்றியது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்தை, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவே, மத்திய அரசு, இந்த மசோதாவை நிறைவேற்றியதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தை, தங்களுக்கு மிகவும் தொந்தரவுஅளிக்கும் விஷயமாக மத்திய அரசு கருதுகிறது. இதனால், தகவல் உரிமை சட்ட ஆணையத்தின் அதிகாரத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர, ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவால், தகவல் அறியும் உரிமை சட்டம், அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது.அரசுத்துறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக, 10 ஆண்டுகளாக, நாட்டு மக்கள், இந்த சட்டத்தை பயன்படுத்தி வந்தனர்.இதன் மூலம், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இப்போது, இந்த ஆணையத்தை முற்றிலும் அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு, சோனியா கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-201913:38:35 IST Report Abuse
நக்கல் ஒண்ணும் தெரியாத தத்தி இந்தம்மா...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-ஜூலை-201910:27:25 IST Report Abuse
Anand சே, என்னத்த சொல்ல, இங்கேயே கிடைத்தவரையில் ஆட்டையை போட்டுட்டு இருக்கலாம்னு நெனெச்சா இருப்பதேயெல்லாம் தோண்டி துருவி எடுக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கு....
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201910:26:26 IST Report Abuse
RM BJP silently getting powers to control fundamental rights of Indian people in all sectors education,finance,railway and now RTI.They do every step to protect corporates.This is not good for democracy .We should not oppose as it is told by Soniaji.We should consider opposition partys opinion also .BJP is not 100 percent perfect.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X