அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்

ஆமதாபாத்: காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, அஹமது படேல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதி கோரியதால், அவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காங்., மூத்த தலைவரான, அஹமது படேல், குஜராத் மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, பல்வந்த்சிங் ராஜ்புத், வழக்கு தொடர்ந்து உள்ளார்.'கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்க வைக்கப்பட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'பென்டிரைவ்' தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, சாட்சியான ரோஹன் குப்தா கோரினார். ஆனால், அதை குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.




இந்நிலையில், 'மற்றொரு சாட்சியான, பல்தேவ்ஜி தாக்குர், தனது வாதத்துக்கு ஆதாரமாக, காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அஹமது படேல் சார்பில் மனு கொடுத்தார்.இதையடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும்; ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கையை புதிய வடிவில் தாக்கல் செய்ததற்காகவும், அஹமது படேலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
24-ஜூலை-201911:36:51 IST Report Abuse
வால்டர் அதென்ன அஹமது படேல்?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஜூலை-201908:49:30 IST Report Abuse
A.George Alphonse இவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் போட்டிடுருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201914:14:53 IST Report Abuse
skv srinivasankrishnaveniமதம் மாறியிருப்பானுக படேல் என்பது குஜராத் லே ஒரு சமூகம் பேருங்க நம்ம ஊர்லே இருக்கும் செட்டியார் முதலியார் பிள்ளைமார் நாயக்கர் நாயுடு ரெட்டி என்பதுபோல...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஜூலை-201904:28:51 IST Report Abuse
blocked user 5000 எல்லாம் இவனுக்கு ஒரு பணமே அல்ல.. ஒரு நாள் நீதிமன்ற வாசலில் நின்று டவாலியாக பணியாற்ற தண்டனை கொடுத்து இருக்கலாம்.
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
24-ஜூலை-201912:40:37 IST Report Abuse
JSS5000 ரூபாய் இவரது ஒருவேளை டீ செலவுக்குத்தான் ஆகும். சாதாரண மனிதர்களுக்கு சாதாரண குற்றங்களுக்கே பத்தாயிரம் அபார்த்தம் விதிக்கும்போது இவருக்கு மட்டும் 5000 விதிப்பதேன். திரு அல்போன்ஸ் எழுதியது போல் 5லட்சம் விதித்து இருக்கவேண்டாமோ? அரசியல்வாதிகள் எந்த குற்றம் செய்தாலும் (கொலை குற்றம் தவிர) சிறை தண்டனையோடு மினிமம் 1 கோடியிலிருந்து ஐந்து கோடிவரைஅபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கவேண்டும் . ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனைதான் சால சிறந்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X