அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்| Dinamalar

அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (5)
Share
அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்

ஆமதாபாத்: காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, அஹமது படேல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதி கோரியதால், அவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காங்., மூத்த தலைவரான, அஹமது படேல், குஜராத் மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, பல்வந்த்சிங் ராஜ்புத், வழக்கு தொடர்ந்து உள்ளார்.'கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்க வைக்கப்பட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'பென்டிரைவ்' தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, சாட்சியான ரோஹன் குப்தா கோரினார். ஆனால், அதை குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.


latest tamil news


இந்நிலையில், 'மற்றொரு சாட்சியான, பல்தேவ்ஜி தாக்குர், தனது வாதத்துக்கு ஆதாரமாக, காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அஹமது படேல் சார்பில் மனு கொடுத்தார்.இதையடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும்; ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கையை புதிய வடிவில் தாக்கல் செய்ததற்காகவும், அஹமது படேலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X