பொது செய்தி

இந்தியா

மாதத்தில் 25 இரவுகள் எல்லையில் தங்குங்க! பி.எஸ்.எப்., கமாண்டர்களுக்கு உத்தரவு

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'சர்வதேச எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, மாதத்தில், 25 இரவுகள் தங்க வேண்டும்' என, கமாண்டர்களுக்கு, பி.எஸ்.எப்., உத்தரவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், 485 கி.மீட்டர் நீளம், ஜம்மு - காஷ்மீரிலும், 553 கி.மீட்டர் நீளம், பஞ்சாபிலும் அமைந்துள்ளன. மீதி பகுதிகள், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ளன.இந்த எல்லை பகுதிகளில், பயங்கரவாதிகள்
 மாதத்தில் 25 இரவுகள் எல்லையில் தங்குங்க! பி.எஸ்.எப்., கமாண்டர்களுக்கு உத்தரவு

புதுடில்லி: 'சர்வதேச எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, மாதத்தில், 25 இரவுகள் தங்க வேண்டும்' என, கமாண்டர்களுக்கு, பி.எஸ்.எப்., உத்தரவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், 485 கி.மீட்டர் நீளம், ஜம்மு - காஷ்மீரிலும், 553 கி.மீட்டர் நீளம், பஞ்சாபிலும் அமைந்துள்ளன. மீதி பகுதிகள், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ளன.இந்த எல்லை பகுதிகளில், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை பணியில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு பயிற்சியில், பி.எஸ்.எப்., கடந்த, 1ம் தேதி முதல், 15 வரை, ஈடுபட்டது. இதில், பி.எஸ்.எப்., உயர் அதிகாரிகள் உட்பட, அனைவரும் பங்கேற்றனர். இந்த பயிற்சிக்கு, 'சுதர்ஷன்' என, பெயரிடப்பட்டது.இதையடுத்து, பி.எஸ்.எப்., வெளியிட்டுள்ள அறிக்கை:எல்லையில் மேற்கொண்ட, 15 நாள் பயிற்சியில், எல்லையில், இரவு நேரத்தில், அதிக விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இதையடுத்து, மாதத்தில், 25 இரவுகள், எல்லையில், கமாண்டர்கள் தங்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாக்., ராணுவத்தின் அத்துமீறலை தடுக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூலை-201908:08:32 IST Report Abuse
RajanRajan NIA - இந்தியாவில் இருக்கும் தீவிரவாத பிரிவினைவாத இயக்கங்களை அதன் தலைவர்களையும் கூண்டோடு ஒழிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒலிக்கும் முதல் முகமாக சுவீச் பாரத் இங்கு மும்முரமாக செயல் பட வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
24-ஜூலை-201907:56:19 IST Report Abuse
GMM BSF வீரர்கள் தேச பக்தி உடையவர்கள். இந்திய பகுதியில் ஊடுருவல் அரசியல் கட்சி, மத நம்பிக்கை அமைப்பு... ஆதரவு இன்றி நினைத்து கூட பார்க்க முடியாது. உள்ளுர் காவல் துறை 24 மணி பணி நிர்வாக குழுஉடன் இணைந்து சட்ட விரோத ஊடுருவல் குறைக்க/தடுக்க முடியும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-ஜூலை-201907:05:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Suggest same rule should be adapted to all politicians in India. Unless this should be contested in election. If this implemented in our country it be better to elect good politician
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X