பின்லேடனை கொல்ல உதவியது நாங்கள் தான்: பாகிஸ்தான்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (36)
Advertisement

வாஷிங்டன்: சர்வதேச பயங்கரவாதியும் அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவனுமான ஒசாமா பின்லேடனை 2011ல் அமெரிக்க ராணுவம் கொன்றது.






பாக்.கில் பதுங்கியிருந்தபோது பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடன் பதுங்கியிருந்தது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றபின் தான் தெரியும் என பாக்., கூறி வந்தது. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாக்.பிரதமர் இம்ரான் கான் டி.வி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானில், பின்லேடன் பதுங்கியிருந்த விஷயத்தை, அமெரிக்க ராணுவத்துக்கு தெரிவித்தது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தான். அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,விடம் இது பற்றி கேட்டால், அவர்கள் உண்மையை கூறுவர்.





அமெரிக்காவிற்கு ஆதரவாகத்தான் நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருகிறோம். ஆனால் எங்களை நம்பாமல் எல்லையில் பதுங்கியிருந்த நபரை அமெரிக்கா கொன்றது. பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய போரில், 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இழந்து விட்டோம். அதனால் தான், பின்லேடன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா மீது, பாகிஸ்தானியருக்கு கடும்கோபம் ஏற்பட்டது. இவ்வாறு இம்ரான் கூறினார்.





மேலும் பாகிஸ்தானில், பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்க உளவுத்துறைக்கு தெரிவித்ததாக, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டாக்டர் ஷகீல் அப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என, அமெரிக்கா கோரி வருகிறது. இது பற்றி, இம்ரானும், டிரம்பும் பேசவில்லை. எனினும், ஆப்கனில், அமெரிக்க ராணுவ வீரரை சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக கூறி, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நரம்பியல் பெண் விஞ்ஞானியான, 86 வயது, ஆபியா சித்திக்கை விடுதலை செய்தால், ஷகில் அப்ரிடியை விடுவிப்பதாகவும் கூறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-201918:06:49 IST Report Abuse
ஆப்பு ஔரங்கசீப் பரம்பரை....
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
24-ஜூலை-201914:48:39 IST Report Abuse
Rohin ஏன்னா உலகநாடுகள் உங்களை நன்றாக புரிந்துகொண்டுவிட்டார்கள் நீங்க திருந்தா ஜென்மங்கள் என்று, காலம் கடந்துவிட்டது ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுத்தது அழிவுப்பாதை
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
24-ஜூலை-201914:33:37 IST Report Abuse
Rohin பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்து ஒளித்து வைத்திருந்ததே இந்த இந்த தீவிரவாத பாக்கி தான், இப்போ அமெரிக்காவிடம் பிட்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகமாக பொய்யை சொல்லிக்கொண்டு அலைகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X