பொது செய்தி

இந்தியா

அதிகரிக்கும் இன்டர்நெட் பயன்பாடு; வேகமெடுக்கும், 'டிஜிட்டல்' ஊடகம்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (10)
Advertisement

மும்பை: 'டிஜிட்டல்' ஊடகத் துறை, 2021ல், 35 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாக உருவெடுக்கும் என, பிக்கி - -இ.ஒய்., நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், 'இன்டர்நெட்' எனும், இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவதால், டிஜிட்டல் ஊடகத் துறை, விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதையடுத்து, இத்துறையானது, நடப்பு ஆண்டிலேயே, சினிமா துறையை பின்னுக்குத் தள்ளிவிடும்.

டிஜிட்டல் ஊடகத் துறையானது, 2021ல், 35 ஆயிரத்து, 190 கோடி ரூபாய் மதிப்புள்ள துறை என்ற நிலையை எட்டிவிடும். சினிமா துறையின் மதிப்பு, கடந்த ஆண்டில், 17 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருந்தது. 2019ல் இத்துறையானது, 19 ஆயிரத்து, 320 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை, அதன் மதிப்பு, கடந்த ஆண்டில், 30 ஆயிரத்து, 360 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2021ல், இத்துறை மதிப்பு, 33 ஆயிரத்து, 120 கோடி ரூபாயாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், டிஜிட்டல் ஊடகத்தின் மதிப்பு, 42 சதவீத வளர்ச்சியை அடைந்து, 16 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வளர்ச்சி வேகத்துக்கு முக்கியமான காரணம், நாட்டில், மொபைல் போன் வைத்திருப்பவர்கள், அதை பயன்படுத்தும் மொத்த நேரத்தில், 30 சதவீதத்தை, பொழுதுபோக்குகளில் செலவழிக்கின்றனர் என்பது தான். இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஊடகம், 2019ல், 22 ஆயிரத்து, 80 கோடி ரூபாய் மதிப்பு உள்ளதாக வளர்ச்சியுறும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், 32.50 கோடி பேர், 'வீடியோ' பார்வையாளர்களாகவும், 15 கோடி பேர், 'ஆடியோ' சேவையை பயன்படுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். வரும், 2021ல், பணம் செலுத்தி, வீடியோ சேவையை பெறுபவர்கள் எண்ணிக்கை, மூன்று கோடியிலிருந்து, 3.5 கோடியாக இருக்கும். ஆடியோவை பொறுத்தவரை, 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர், பணம் செலுத்தி சேவை பெறுபவர்களாக இருப்பர். இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
24-ஜூலை-201910:25:20 IST Report Abuse
DSM .S/o PLM ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா :- இந்த நாடு முழுவதையும் தங்கமாக மாற்றினாலும் ஆப்பு போன்றவர்களுக்கு, மோடி ஒழிகதான் பிடிக்கும்.. என்ன செய்ய.. இவர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருப்பது வீண்.
Rate this:
Share this comment
Azhagan Azhagan - Chennai,இந்தியா
24-ஜூலை-201911:22:47 IST Report Abuse
Azhagan Azhaganஆப்பு, ஜாயிண்டுபுறம், தாண்டவம், அஜித், சாலிசு, புகளு, நெப்போலியன், பிரவீன், ஆனந்து போடுற கருத்துக்களிலாம் சிந்திக்க ஒன்றும் இருக்காது. நேரடியாக மோசம் என்ற கருத்தை பதிவிட வேண்டியதுதான். ஏனென்றால் இவர்களெல்லாம் கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பாளர்கள். நடுநிலையாளர்கள் கருத்துக்கள் இல்லை....
Rate this:
Share this comment
Samir - Trichy,இந்தியா
24-ஜூலை-201912:21:27 IST Report Abuse
Samirடே போங்கடா...
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201907:20:39 IST Report Abuse
ஆப்பு கடந்த அம்பது வருஷமா நேரு குடும்பத்தினரே ஆண்டாலும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு நேரு ஒண்ணுமே செய்யலை. நாங்கதான் நாலே மாசத்திலே டிஜிட்டல் நா என்னான்னு பாரதத்துக்கே தெரிய வெச்சோம். சங்கு ஊதுங்க சங்கிகளே..
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜூலை-201908:23:01 IST Report Abuse
ஆரூர் ரங்உலகம் முழுக்க டிஜிட்டல் பரவிக்கொண்டிருந்தபோது ஒரு சாதாரண லேண்ட்லைன் போனுக்கு புக் பின்னணி பத்துவருஷம் காத்திருந்தது மறக்குமா? அதுவும் பாதி நேரம் சைலன்ட் மோடில் இருக்கும். இல்லாட்டி கிராஸ் டாக்கில் நம்மோட பர்சனல் விஷயம் ஊரு பூரா பரவும். வால்வ் ரேடியோ வெச்சிருக்கக்கூட லைசென்ஸ் பணம் வாங்கிக்கிட்டிருந்தாங்க. அது யாரோட சாதனை?...
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
24-ஜூலை-201910:28:45 IST Report Abuse
DSM .S/o PLM இந்த ரேடியோ விற்கு லைசென்ஸ் மற்றும் அதற்கு கட்டணம் என்று ஒரு கொடுமை இருந்ததே..சாமி.. யாராவது லைசென்ஸ் இல்லாமல், கட்டணம் செலுத்தாமல் ரேடியோ வைத்திருக்கிறார்களா என்று ரைடு வேற வருவாங்க... இதெல்லாம் என்ன ராகத்தில் வரும்? தனிமனித சுதந்திரம், மண்ணாங்கட்டி எல்லாம் அப்போ எங்கே போயிருந்தது? அதெல்லாம் இந்த குருமுட்டை மோடி ஒயிகா குரூப்பு களுக்கு தெரியாது , புரியாது....
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
24-ஜூலை-201910:53:16 IST Report Abuse
வந்தியதேவன்ரொம்ப பெருமை பீத்திக்காதீங்க... மிஸ்டர் ஆரூர் ரங்... ///அதிகரிக்கும் இன்டர்நெட் பயன்பாடு/// இது கலியுகம் முடியும் நேரத்தின் இறுதிக்கட்டம்... “தெய்வம் மனுஷ ரூபேனா”...ங்கற மாதிரி... தெய்வம் மனித ரூபத்தில் மட்டும் வராது... இன்டர்நெட் போன்ற டிஜிட்டல் ரூபத்திலும் வரும்... புரியலையா? பகவான் கிருஷ்ணர்... மனிதன் தன்நிலை மறந்து... தன்நிலை மாறி.. மனிதத்தை இழந்து “மிருகமாய்” மாறும்போது.. நான் “கல்கி” அவதாரமாய் அவதரிப்பேன்...னு சொல்லியிருக்காரு.. அந்த கிருஷ்ண பகவான்... கல்கி அவதாரமாய் “தகவல்தொழில் நுட்ப” ரூபத்தில் உருவாகியிருக்கிறார்... இதுவே... மனித குலத்தின் அழிவுக்கு ஆரம்பம்...? மறந்துவிடாதீர்கள் மிஸ்டர் ஆரூர் ரங்.. நீங்க சொன்ன லேன்ட் லைன் போன்.. வால்வ் ரேடியோ இருந்தப்ப.. மனிதன் மனிதனாய் இருந்தான்.. மனிதன் தழைத்திருந்தது... இயற்கையுடன் இணைந்து... மழை பெய்ய வேண்டிய நேரத்தில் அளவுடனும்.. வெயில் தேவையான அளவுக்கும்... பனி மிதமாய் பொழிந்தது... இப்போது... தகவல் தொழில்நுட்ப காலம் துவங்கிய பின்... பெருவெள்ளமும், வறட்சியும், கடும் வெய்யிலும் காய ஆரம்பித்துவிட்டது... காரணம்.... டிஜிட்டல் யுகம் துவங்கியதால்... தான் குடியிருந்த கர்ப்பபையையே அறுத்தெரியும் செயலாக இயற்கையை அழிக்க இன்றைய டிஜிட்டல் மனிதஇனம் முயல்வதால்... உலகம் அழிவதற்கான “ட்ரைலர்”தான் இப்போது... சீக்கிரத்துல மெயின் பிக்சர் வரும்போது... மனித இனம் பூண்டோடு வேரரறுக்கப்படும்......
Rate this:
Share this comment
srinivasan - bangalore,இந்தியா
24-ஜூலை-201915:33:20 IST Report Abuse
srinivasanயோவ் ,உங்க பப்பு ஜெயிக்கலை,அந்த காண்டுல இங்க வந்து தத்துவமா தள்ளுறியா. மனித இனம் பூண்டோடு வேரறுக்கப்படும். எப்பா, என்னா வயிற்றெரிச்சல்.அப்படி போன நீயும் இல்ல ,நானும் இல்ல.அதுவரை மோடி போன்றவர்களின் நல்லாட்சியில் நிம்மதியாக ,இந்தியன் எனும் பெருமையோடு வாழ்வோம்....
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
24-ஜூலை-201920:05:29 IST Report Abuse
வந்தியதேவன்அய்யா... சீனிவாசன் சார்... அப்பக்கூட உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும் பற்றித்தான் கவலைப்படுகிறீரே... தவிர... நம் சந்ததிகள்.. பரம்பரைகள்.. பேரன் பேத்திகள் நல்லா இருக்கணும்... தீர்க்க ஆயுசோட இருக்கணும்...ங்கற எண்ணம் வருதா பாரு...? வராது...? ஏன்னா... இது டிஜிட்டல் கலிகாலம்..? நான் மட்டும் நல்லா இருக்கணும்... நான் மட்டும் ஜல்சாவா... குஜாலாவா... இருக்கணும்... நம்ம புள்ளைங்க எப்படி இருந்தா என்ன..? அப்படீங்கற மனோபாவம்... இதே மனோபாவம்... உங்களோட, என்னோட தாத்தா, அப்பா, பாட்டி, அம்மாவுக்கு இருந்திருந்தா... நீயும் நானும் இருந்திருக்க மாட்டோம்... என்ன ஒரு சுயநலம்...? ச்சே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X