சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரம் வெட்ட சென்ற 18 பேர் ஆயுதங்களுடன் கைது

Added : ஜூலை 24, 2019
Share
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, திருப்பதிக்கு செம்மரம் வெட்ட சென்ற, 18 பேரை, கண்ணமங்கல போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கல காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாழியூர் கிராம கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டி சென்று, கண்ணமங்கலத்தில் காரை மடக்கி பிடித்தனர். அதில் பயணம் செய்த, மலைவாழ் கிராமமான ஜமுனாமரத்தூர், கானமலை, அரசனூர் பகுதியை சேர்ந்த, 18 பேர், ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து செம்மரம் வெட்ட தேவையான கத்தி, கடப்பாரை, கோடாலி, சம்மட்டி, உள்ளிட்ட பொருட்களுடன், டாடா சுமோ காரையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X