பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை எட்டியது

Added : ஜூலை 24, 2019
Share
Advertisement
 கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை எட்டியது

மேட்டூர்:
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட நீர் நேற்று மேட்டூர் அணைக்கு வந்தது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துஉள்ளது.இதையடுத்து கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 7600 கன அடியாக அதிகரித்தது.மாலை 4:00 மணிக்கும் அதே அளவில் நீர்வரத்து இருந்தது. இதனால் சில மாதங்களாக வறண்டு போயிருந்த ஒகேனக்கல் ஐந்தருவி ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சினி பால்ஸ் மெயின் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை விதித்துள்ளார். 'மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணியர் ஒகேனக்கல் வருவதை தவிர்க்க வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பரிசல் துறை நேற்று மூடப்பட்டு பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.ஒகேனக்கலை கடந்த காவிரி நீர் பாலாறு வனப்பகுதி வழியாக நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை எட்டியது. நேற்று காலை வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து மாலை 7000 கன அடியாக அதிகரித்தது.அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி; தற்போது நீர்மட்டம் 39.13 அடியாகவும்; நீர் இருப்பு 11.64 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X