சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் அடியில் சிக்கிய பெண் மீட்பு

Added : ஜூலை 24, 2019
Advertisement

மதுரை: சென்னையில் இருந்து புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில், இன்று(ஜூலை 24) காலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. பூர்ணிமா என்ற பெண் ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது, ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் பொது மக்களும் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர முயற்சிக்கு பின்னர், அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் பூர்ணிமாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஒரு மணி நேரமாக ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டன. ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X