சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மேயர் கொலை: போலீஸ் விசாரணை தீவிரம்

Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் நேற்று(ஜூலை 23) படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, உமா மகேஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லை. அருகில் இருந்த ஓட்டல் ஒன்றில், இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு முன்னர் இரண்டு பேர் உமா மகேஸ்வரி வீட்டிற்குள் சென்றனர். தொடர்ந்து மற்றொரு நபர், பையுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால், அவர்கள்தான் கொலையாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், 3 பேரையும் கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த பீரோக்கள் அனைத்தையும் அவர்கள் திறந்து பார்த்துள்ளனர். பீரோக்களில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால், அவர்கள் நகைக்காக தான் 3 பேரையும் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. வீட்டை விட்டு செல்லும் போது, வாசலில் இருந்த திரைச்சேலையில் ரத்தக்கறையை துடைத்து சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
24-ஜூலை-201918:17:41 IST Report Abuse
Gopi ரவுடிகள் அருவா சொத்து தகராறு வக்கீல் காவல்துறை அரசியல் பின்புலம் உள்ள தாதாக்கள் , கூட பிறந்தோரையே சொத்துக்காக கொடூரமாக கொலை செய்யும் எண்ணம். படிப்பைக்கூட தீய புத்திக்கு பயன்படுத்துவது மா பாதகம் . கூட்டு சீக்கிரம் வெளிவரும்
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
24-ஜூலை-201917:29:45 IST Report Abuse
chander இது பணத்திற்காக அல்ல என்பது தெரிகிறது முன்விரோத கும்பல் செய்த சதிவேலையாக தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-201914:29:50 IST Report Abuse
Lion Drsekar சோடா பாட்டில், சைக்கிள் செயின், சாராயம் , பட்டா கத்தி இதுதான் அரசியலுக்கு தேவையான முக்கிய தகுதிகள், இவைகள் அனைத்தும் திரு சோ சொன்னது, இதற்க்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X