பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
வாஷிங்டன்: பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.பயற்சி பெற்ற பயங்கரவாதிகள்அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அமைதி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கடந்த 2014 ல் தலிபான் பயங்கரவாதிகள், ராணுவ பள்ளியில் 150 பள்ளி குழந்தைகளை படுகொலை செய்தனர். இதனை

வாஷிங்டன்: பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.



latest tamil news





பயற்சி பெற்ற பயங்கரவாதிகள்



அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அமைதி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கடந்த 2014 ல் தலிபான் பயங்கரவாதிகள், ராணுவ பள்ளியில் 150 பள்ளி குழந்தைகளை படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத குழுக்களை செயல்பட அனுமதிப்பது இல்லை என முடிவு செய்ததுடன், இதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்கின. நாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில், இது குறித்து எந்த அரசுக்கும் அரசியல் ரீதியில் நம்பிக்கை இல்லை. பாகிஸ்தானில் இன்னும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்று, ஆப்கன் மற்றும் காஷ்மீரில் செயல்பட்டுள்ளனர். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக எங்களது அரசு தான் முதலில் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களின் மையங்கள், போதனை வகுப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றார்


latest tamil news




40 குழுக்கள்



முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருகிறது. இரட்டை கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு கிடையாது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கனில் செயல்படுகிறது. பாகிஸ்தானில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோமா என எங்களை போன்றவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா வெற்றி பெற உதவுகிறோம். சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
24-ஜூலை-201918:07:57 IST Report Abuse
Balakrishnan Kamesh அண்ணே அண்ணே டிரம்ப் அண்ணே ... 40000 பயங்கரவாதி க்கு சோறு போட்டு அவனுகளை குஜால் படுத்தினால் தான் அவனுங்க நான் சொல்றதை கேப்பானுங்க இல்லைனா எனக்கே ஆப்பு வச்சுவிடுவானுங்க .. பொறவு நான் வேறே நயா பாக்கிஸ்தான் என்ற கற்பனை கதையை வச்சு ஏதோ ஓட்டிட்டு இருக்கேன் ... அதனாலே பாத்து கொஞ்சம் போட்டு கொடுங்கண்ணே ... எனக்கு சூடு சொரணை ஏதும் கிடையாது ..உன் காலுலே வேணாலும் விழுறேன் ..
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201917:35:37 IST Report Abuse
sekar ng பயங்கரவாதிகளை களையெடுக்க இந்தியாவிடம் ஏன் உதவி கோரவில்லை. இந்தியாவிடம் நட்பு செய்து சுய பொருளாதார வளர்ச்சியுர இந்தியாவை விட அமெரிக்கா எப்படி உதவும் ஆயுதமும் பணமும் பயங்கர வாதத்தை தான் வளர்க்கும். முதலில் ராணுவாட்சி களையபடவேண்டும்
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201917:19:35 IST Report Abuse
sekar ng இதுவரை 40 தீவிரவாத குழுக்களை ராணுவ உதவியுடன் நிதியை வீண் செய்தீர்கள். இனி அமெரிக்க பண உதவியுடன் உங்கள் ராணுவம் தீவிரவாத குழுக்கள் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவாமல் தீவிரவாத தொழிலையே தொடர்ந்து வளர்ப்பதை வழக்கம் போல் நம்புகிறது. 2002ல் அமெரிக்காவை பின் லேடன் கொடுரமாக தாக்கியதை மறந்து விட்டது . பாகிஸ்தான் பயங்கரவாத இன்ஸ்டி டுயூட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X