பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல்| 40 militant groups were operating in Pakistan: Imran Khan | Dinamalar

பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (42)
Share

வாஷிங்டன்: பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.latest tamil news

பயற்சி பெற்ற பயங்கரவாதிகள்அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அமைதி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கடந்த 2014 ல் தலிபான் பயங்கரவாதிகள், ராணுவ பள்ளியில் 150 பள்ளி குழந்தைகளை படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத குழுக்களை செயல்பட அனுமதிப்பது இல்லை என முடிவு செய்ததுடன், இதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்கின. நாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில், இது குறித்து எந்த அரசுக்கும் அரசியல் ரீதியில் நம்பிக்கை இல்லை. பாகிஸ்தானில் இன்னும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்று, ஆப்கன் மற்றும் காஷ்மீரில் செயல்பட்டுள்ளனர். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக எங்களது அரசு தான் முதலில் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களின் மையங்கள், போதனை வகுப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றார்


latest tamil news
40 குழுக்கள்முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருகிறது. இரட்டை கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு கிடையாது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கனில் செயல்படுகிறது. பாகிஸ்தானில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோமா என எங்களை போன்றவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா வெற்றி பெற உதவுகிறோம். சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X