அதிருப்தி எம்எல்ஏ மீது நடவடிக்கை: குமாரசாமி, காங்., உறுதி

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
Congress, HD Kumaraswamy, Strong Action, Rebels,அதிருப்தி எம்எல்ஏக்கள், குமாரசாமி, காங்., உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ காரணமான 13 காங்கிரஸ் மற்றும் 3 மஜத எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என இரு கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.

கர்நாடகாவில், காங்கிரசை சேர்ந்த 13 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், பதவி கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் அவர்கள், மும்பை சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தொடர்ந்து, சட்டசபையில், தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதாக குமாரசாமி அறிவித்தார். 18 ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதம் துவங்கியது. நேற்று(ஜூலை 23) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக 105 பேரும், ஆதரவாக 99 பேரும் ஓட்டு போட்டனர். 20 பேர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து, குமாரசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அரசு கவிழ காரணமான அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரு கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.

குமாரசாமி கூறுகையில், துரோகம் செய்தவர்கள் ஊக்குவிக்கப்பட மாட்டார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.


latest tamil news




காங்கிரசின் சித்தராமையா கூறியதாவது: பா.ஜ.,வின் சதி வலையில் விழுந்தவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட மாட்டார்கள். 15 - 16 எம்.எல்.ஏ.,க்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி, நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் சட்ட விதிகளை மீறியது. இதன் மூலம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூலை-201917:46:45 IST Report Abuse
RajanRajan நீங்க தகுதி நீக்கம் பண்ணினா அவுங்களுக்கு ஒன்னும் ஆக போவதில்லையே. மறுபடியும் உங்க பலவீனம் தானே தெரியும். நீங்க எல்லாவனும் உங்க பதவி ஆசைக்கு அவுங்களை உபயோக படுத்தினீங்க. இப்போ அவிங்க உங்களை மொத்தமா கவுத்து இப்படி எல்லாம் பண்ணுறது மகா தப்புன்னு விஷயத்தை உங்களுக்கு புரிய வச்சிட்டாங்க. இது என்ன உங்களுக்கு இந்த கொதிப்பு கொந்தளிப்பு எல்லாம். .போங்க போயி அவனவன் வீடு வேலைகளை கவனியுங்க. போதும் இந்த அரசியல் சித்து விளையாட்டுகள் எல்லாம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூலை-201917:05:52 IST Report Abuse
Endrum Indian கொமாரு ஒன் நடிப்பு சகிக்கல்லைஎன்னவோ 6 கோடி கன்னடர்களுக்கு நான்??? என்னா மாய் மாலம்?? . போதும் போதும் இறங்கு அந்த நாற்காலியை விட்டு சட்டு புட்டுன்னு???
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-ஜூலை-201916:49:03 IST Report Abuse
Indhuindian தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவால்லே அவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X