ஜெய் ஸ்ரீராம் முழக்கம்; பிரபலங்கள் வருத்தம்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (110)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டில், ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிரத்னம், அபர்னா சென், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.தாக்குதல்கள் :மேற்குவங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஆங்காங்கே சிறுபான்மை

புதுடில்லி : நாட்டில், ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிரத்னம், அபர்னா சென், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.latest tamil newsதாக்குதல்கள் :

மேற்குவங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஆங்காங்கே சிறுபான்மை இன இளைஞர்களை 'ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிடக்கோரி தாக்குதல்கள் நடந்துள்ளன. இப்பிரச்னையில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


latest tamil news
ஜெய்ஸ்ரீராம் போர் முழக்கமல்ல :


கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது என்றும், தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் போற்றும் ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தைப் ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.


latest tamil newsஆளுங்கட்சி தேசமல்ல :

ஆளுங்கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என எந்த பொருளும் இல்லை என்றும், ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை வழங்குவது தேசத்துக்கு விரோதமாக கருதப்பட முடியாது என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரபலங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மணிரத்னம், அனுராக் காஷ்யப் :

எதிர்ப்பை நசுக்காத தேசமே பலமான தேசம் எனக் கூறியுள்ள அந்தக் கடிதத்தில் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201916:06:23 IST Report Abuse
Seitheee அவலகங்கள் கருத்து. இந்த நாற்பத்தி ஒன்பது பெரும் ஒன்றும் பெரிய சாதித்தவர்கள் அல்ல.
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
29-ஜூலை-201911:04:02 IST Report Abuse
Guna மதம் மனிதனால் உண்டாக்க பட்டது. மதம் ஒரு சிலருக்கு வெறியாக மாறிவிட்டதால், எல்லா மதத்திலும் சில தீவிர வாதிகளும் இந்த நாட்களில் தோன்றி இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் பிற மத நம்பிக்கையுள்ளவர்கள் மீது காழ்புணர்ச்சியின்றி இணக்கத்துடன் சுதந்திரமாகவும் சுதந்திரம் கொடுத்ததும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து சுகித்த நாடு நம் நாடு. ஒரு சிலர் செய்யும் பலாத்கார செயல்களால் நாடு காடாக மாறி வருகிறது நம் மக்கள் அயல் நாட்டிலும் வாழ்கிறார்களே அவர்கள் வயிற்றில் கலக்கம் உண்டாகாதா ? பட்டயத்தை எடுப்பவன் பட்டயத்தாலே மடிவான் . இது மாற்ற கூடாத, மாற்ற முடியாத விதி அடுத்தவனை நோகடித்து நாம் மட்டும் எவ்வளவு நாள் வாழ்ந்து விட முடியும் ? என்ன சாதிக்கப்போகிறோம் ? முகஸ்துதி செய்து தெய்வத்தை பிரியப்படுத்துவதை அந்த தெய்வம் ஏற்றுக்கொள்ளுமா ? அப்படிப்பட்ட ஒரு தெய்வம் தெய்வம் தானா ? பட்சபாதம் இல்லாத அந்த உண்மையான தெய்வத்திற்கு எல்லாரும் ஒரு நாள் நம் வாழ்க்கைக்கான கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
25-ஜூலை-201913:01:19 IST Report Abuse
narayanan iyer இவர்களை எல்லாம் தயவுசெய்து பிரபலங்கள் என்று சொல்லாதீர்கள் . தமிழ்நாட்டில் திருவல்லிக்கேணியில் பிற்படுத்தப்பட்ட பிராமணர்களின் பூணல் அறுத்து துன்புறுத்தும் போது அவர்களின் ஒன்பது தூவாரங்களையும் மூடிக்கொண்டுதானே இருந்தனர் . ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னதால் தவறில்லை . ஒருவரின் பெயர் ஸ்ரீராம் என்று இருந்தால் கூப்பிடுவீர்கள் அல்லவா ? அதுபோல்தான்இதுவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X