பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'அடித்து கொல்லும் கொடூரம்
தடுத்து நிறுத்தப்பட வேண்டும்'

புதுடில்லி, 'முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறு பான்மை சமுதாயத்தினரை அடித்து கொல்லும் கொடூரம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என, பல துறை பிரபலங்கள்,49 பேர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'பிரதமர் மோடிக்கு திறந்த கடிதம்' என்ற பெயரில், தமிழ் நடிகை, ரேவதி, சினிமா பிரபலங்கள், ஷியாம் பெனகல், அபர்ணா சென், சவ்மித்ரா சாட்டர்ஜி, வரலாறு அறிஞர்,ராமச் சந்திர குகா போன்ற, 49 பிரபலங்கள், வெளி யிட்டு உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மாறுபாடான கருத்துகளை கொண்டது தான் ஜனநாயகம். பெரும்பான்மையான கருத்துக்கு, எதிராக பேசுவோர், சமூக விரோதிகளாகவும், நகர்புற நக்சல் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படு கின்றனர்.தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, 2016ல், தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் களின் எண்ணிக்கை,840 ஆக உள்ளது.தலித், சிறுபான்மையினர், முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு, மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். அமைதியை போதித்த ராமபிரானை போற்றும், 'ஜெய் ஸ்ரீராம்' மந்திரத்தை, போர் அறைகூவல் போல சிலர் உச்சரிக்கின்றனர்.
இது, அமைதியை விரும்பும், இந்தியராக இருப்பதை

Advertisement

பெருமையாக கருதும்,எங்களை போன்றவர் களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. அப்பாவிகள் அடித்து கொல்லப்படுவதை கண்டித்து, பார்லிமென்டில் நீங்கள் பேசி உள்ளீர்கள்; அது போதாது. அத்தகைய தாக்குதலை துாண்டி விட்டவர்கள் மீது, நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன, என்பதை அறிய விரும்பு கிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள், பாதுகாப்பாகத் தான் இருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இல்லாதது போன்ற கற்பனை தோற்றத்தை உருவாக்க, இவர்கள் முயன்று உள்ளனர். லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து இன்னும் மீளாத சிலர்,சில குற்ற செயல்களை, நாடு முழுமைக்குமான செயல்க ளாக காட்ட முயன்றுள்ளனர். இது போல தான், 2014 ல், விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன் என, சிலர் கிளம்பினர்.


முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் விவகாரதுறை அமைச்சர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
28-ஜூலை-201913:42:18 IST Report Abuse

rishiதமிழ் நாட்டில் கொல்லப்பட்ட , சேலம் ரமேஷ் வேலூர் அரவிந்த் ரெட்டி , வெள்ளையப்பன் , திருபுவனம் ராமலிங்கம் இவர்களுக்கு குரல் கொடுத்தீர்களா?

Rate this:
Bala - chennai,இந்தியா
27-ஜூலை-201923:14:31 IST Report Abuse

Balaதிரு மணிரத்னம் அவர்களே, தங்கள் பிள்ளை வாடிகனில் கிறித்துவ தந்தை ஆவதுற்கு படித்து வருகிறாராமே? உண்மையா ? நம்முடைய பாரம்பர்ய காலத்தை வென்ற, காலத்தை கடந்த அழியாத வைணவ சமயத்தையோ அல்லது சைவ சித்தாந்தத்தையோ, படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் நம் ஊரிலேயே படிக்க வைத்திருக்கலாமே. தவறு செய்து விட்டீர்கள் அய்யா. அவனுடைய எதிர்காலத்தை பாழடித்துவிட்டீர்களே அய்யா.

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
27-ஜூலை-201908:36:51 IST Report Abuse

RameshMercenaries in the Cinema /Literature world....I am wondering on how these people are so convenient and taking ive issue only in the country with with 135+ crore people...Kept MUM : 5000+ people were killed in 1984 5000+ people were killed & 200000 people were driven out from their homeland Kashmir - 1989 by Muslims 2001-70+ people were burnt alive in train by using Petroleum Products and locking passages ....Maximum people are working for Christian group for money or Congress "Un Secular" party /aligned people...Just to be IGROED

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X