காரியாபட்டி : தேசிய அளவில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2019' டில்லி இந்திய தொழில் நுட்ப கழக கல்லுாரியில் நடந்தது.
தமிழகத்திலிருந்து காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரி மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை இலக்ட்ரோபூம் அணித்தலைவர் பிரித்விராஜன், முஹம்மது நுாஹி அப்பாஸ், அப்துல்லாஹ் சாகுல் ஹமீத், சரவணபாண்டியன், மது ஆனந்தி, திவ்யமீனா பங்கேற்றனர்.
விஜயராஜன், உதவிப் பேராசிரியர் முஹம்மது அலாவுதீன் ஆஷிக் வழிகாட்டுதல்படி முதல் பரிசாக கோப்பை, 75 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றனர். நிறுவனர் முகமது ஜலீல், தலைமை நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மறைக்காயர், முதல்வர் செந்தில்குமார், துறைத் தலைவர் சீனிவாசன் மாணவர்களை பாராட்டினர்.