மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது' ஜெர்மன் பல்கலை வழங்கிய கவுரவம்

Updated : ஜூலை 25, 2019 | Added : ஜூலை 25, 2019 | கருத்துகள் (7) | |
Advertisement
மொடக்குறிச்சி:'மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் என்பவருக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள், 66. இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மூலிகை செடிகள் சேகரிப்பில், ஈடுபட்டு வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளார். 2004ல் இவரது கணவர் இறந்தார்.
 மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது'  ஜெர்மன் பல்கலை வழங்கிய கவுரவம்

மொடக்குறிச்சி:'மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் என்பவருக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள், 66. இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மூலிகை செடிகள் சேகரிப்பில், ஈடுபட்டு வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளார். 2004ல் இவரது கணவர் இறந்தார். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இவர், சாவடிபாளையம் கிராமத்தில், தனியாக வசித்து வருகிறார்.சாமியாத்தாளுக்கு மூலிகைகளை தேடி, சித்த மருத்துவர்களுக்கு வழங்குவது தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. இவரது மூலிகை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வை பாராட்டி, 2012ல், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், 'மூலிகை தாய்' என்ற பட்டத்தை வழங்கினார்.
இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம், கட்சி விழாக்களில், குடில்கள் அமைத்து, மூலிகை செடிகளை வழங்கி வருவதுடன், பல நோய்களுக்கும் தீர்வு கண்டு

வருகிறார்.பழநி சித்த மருத்துவ சங்கம் சார்பில், சாமியாத்தாளுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த, சர்வதேச அமைதி பல்கலை நிர்வாகிகள் மற்றும் சித்த வைத்திய மருத்துவர்கள், சாமியாத்தாளுக்கு, 'வைத்ய பூஷன் விருது' வழங்கி, கவுரவித்தனர்.இவரை தொடர்பு கொள்ள: 99659 - 69558.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-201918:49:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.// ஜெர்மன் பல்கலைகழகம் ஹிந்தி பட்டம் வழங்குதா?? டுபாக்கூர் பல்கலைகழகமா?
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
25-ஜூலை-201918:00:50 IST Report Abuse
Naagarazan Ramaswamy தமிழ்நாடு மருத்துவ பல்கலை கழகம் ஒரு துறையை தொடங்கி பசசிலை மருத்துவத்தையும் மருத்துவர்களையும் ஊக்குவிக்கவேண்டும். அரசு முன் வருமா?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
25-ஜூலை-201912:27:06 IST Report Abuse
தமிழ்வேள் NO need to dep MBBS Doctors. Govt. Must encourage the native Vaidhyars....Like the Pre indepence era LMP and LIM certificate courses, and erstwhile Village Medical Assistant Scheme
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X