பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் தோனி: ராணுவத்துடன் ரோந்து

Updated : ஜூலை 25, 2019 | Added : ஜூலை 25, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீரில், இந்திய ராணுவக் குழுவுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரோந்து பணிக்கு செல்கிறார்.தோனி ரோந்து :வரும் ஜூலை 31 முதல், இந்திய சுதந்திர தினமான ஆக.15 வரையில் இந்த ரோந்துப் பணியில் தோனி ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தினத்தை அவர் இந்த முறை ராணுவத்தினருடனே கொண்டாட

புதுடில்லி: காஷ்மீரில், இந்திய ராணுவக் குழுவுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரோந்து பணிக்கு செல்கிறார்.latest tamil newsதோனி ரோந்து :


வரும் ஜூலை 31 முதல், இந்திய சுதந்திர தினமான ஆக.15 வரையில் இந்த ரோந்துப் பணியில் தோனி ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தினத்தை அவர் இந்த முறை ராணுவத்தினருடனே கொண்டாட உள்ளார்.


latest tamil newsநியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனி, எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.


எம்எஸ் தோனி :


இந்நிலையில் தோனி, தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.


latest tamil newsபாராசூட் ரெஜிமென்ட் :

தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-201907:23:53 IST Report Abuse
venugopal good to see his spirit DHONI....get some good klii and success JAI HIND
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201921:10:11 IST Report Abuse
Rajagopal இந்தியாவின் பாஜகவின் எதிர்கால பிரதமர்.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
25-ஜூலை-201920:07:06 IST Report Abuse
கதிரழகன், SSLC எல்லாம் செஞ்சா விட்டு அறிவுப்பு கொடுக்கணும். இப்ப ஒவ்வொரு தீவிரவாதியும் குறி வைப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X