சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி மேயர் கொலை: மதுரை பிரமுகரிடம் விசாரணை

Added : ஜூலை 25, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கு விசாரணையில் தடயம் எதுவும் சிக்கவில்லை. அரசியல், சொத்து தகராறில் கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என தெரிந்துள்ளது.திருநெல்வேலி தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ல் வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கமிஷனர் பாஸ்கரன்,
மாஜி மேயர் கொலை: மதுரை பிரமுகரிடம் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கு விசாரணையில் தடயம் எதுவும் சிக்கவில்லை. அரசியல், சொத்து தகராறில் கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என தெரிந்துள்ளது.திருநெல்வேலி தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ல் வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது:முதலில் மேயரையும் பிறகு பணிப்பெண்ணையும் அடுத்து மேயரின் கணவரையும் கொலை செய்துள்ளனர். ஒரே மாதிரியான இரண்டு கத்திகளால் குத்தியுள்ளனர். கொலையாளிகள் இரண்டு அல்லது மூன்று பேராக இருக்கலாம்.லேசான கீறல்கள் சில இடங்களில் மட்டுமே கத்தியால் ஆழமாக குத்தி உள்ளனர். லேசான கீறல்கள் அதிகம் உள்ளன. மாஜி மேயருக்கு 18 இடங்களிலும், அவரது கணவருக்கு அதைவிட அதிகமாகவும் குத்து விழுந்துள்ளது. உமாமகேஸ்வரி அணிந்திருந்த வளையல், சங்கிலி என மொத்தம் 14 பவுன் நகைகளை பறித்துள்ளனர். கம்மல்களை விட்டுவிட்டனர்.
அரசியல் இல்லை
திருநெல்வேலி தி.மு.க.,வில் துணைச் செயலராக இருந்தவர் சீனியம்மாள். 1996ல் தி.மு.க., சார்பில் மேயர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தவர். உமாமகேஸ்வரியை விட கட்சியில் மூத்தவர்.ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் நடிகர் சரத்குமார் கட்சியில் இணைந்தார். தற்போது மதுரையில் வசிக்கும் சீனியம்மாளிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் கொலையின் பின்னணியில் அரசியலோ, சொத்துப் பிரச்னைகளோ இருக்க வாய்ப்புஇல்லை என தெரிந்துள்ளது.தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்துவிட்டு கொலை செய்யும் கும்பலே இதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே போல நடந்த சம்பவங்களில் விரல்ரேகைகளை கொண்டு விசாரிக்கிறோம். கொலையாளிகள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.


தினமலர் செய்தி எதிரொலி தி.மு.க., சார்பில் நிதியுதவிநெல்லையில் கொலையான பணிப்பெண்ணின் குடும்பத்திற்கு தினமலர் செய்தி எதிரொலியாக தி.மு.க., சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாரியம்மாளின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மாரியம்மாளுக்கு 17, 15 மற்றும் 14 வயதில் மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் முறையே பிளஸ் 1 பத்து மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். தாயை இழந்து இவர்கள் பரிதவித்தனர். நேற்று முன்தினம் நெல்லை வந்து உமா மகேஸ்வரி அவரது கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மாரியம்மாளின் மூன்று பெண் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறாமல் சென்றது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாரியம்மாள் குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.பாளையங்கோட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., மைதீன்கான் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் நேற்று மாரியம்மாள் வீட்டிற்கு சென்று அவரது மகள்களிடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர்.மேலும் தமிழக அரசு சார்பில் மாரியம்மாள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க நெல்லை காவல்துறையும் முயற்சி மேற்கொண்டுள்ளது. மூன்று மகள்களின் படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய கலெக்டர் ஷில்பாவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pu.ma.ko - Chennai,இந்தியா
26-ஜூலை-201919:34:45 IST Report Abuse
pu.ma.ko முன்னாள் மேயர்களுக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கிடையாதா? கொலையாளிகள் விரைவில் பிடிபட ஆண்டவனை வேண்டுகிறேன்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
26-ஜூலை-201920:28:26 IST Report Abuse
Girijaசூப்பர் ஐடியா, இப்படியெல்லாம் பாதுகாப்பு செய்யணும்னா குடும்பத்தால் ஒருத்தரை போலீசாக்கி வீட்டோட வைத்துக்கொள்ளலாம். என்னமோ நட்டநடு ரோட்டில் நிகழ்ந்த மாதிரி லா அண்ட் ஆர்டர் பத்தி கொறை? வடநாட்டு கொள்ளையர்கள் என்றால் எதுக்கு எல்லோர் சோலியையும் முடிச்சிட்டு போவான் ? ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்...
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
26-ஜூலை-201915:26:17 IST Report Abuse
Baskar மாஜி மேயரை கொலை செய்தது அவரது கட்சிக்காரன் தான். எல்லாம் பதவி வெறி தான். உடனே ஸ்தாலி சிங்கம் போல் சிலிர்த்து எழுவார். உடனே யார் குற்றவாளியாக இருந்தாலும் தவறாமல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று. கடைசியில் இவரது கட்சி ஆட்களே கொலை செய்வார்களாம் இவர் அறிக்கை மட்டும் விடுவாராம் அதோடு அடங்கி விடுவாராம்.. இவர்கள் ஆண்டபோது தமிழகம் எவ்வளவு சுத்தமாக இருந்தது.ரவுடியிசம் இல்லை. கொலை கொள்ளை இல்லை.உர்ப்பிடாத கட்சிக்கு உறுப்பிடாத தலைவன்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-ஜூலை-201911:51:42 IST Report Abuse
Girija சபாஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X