பிரபலங்கள் கடிதத்தை குப்பையில் போடணும்: சுப்ரமணியன் சாமி

Updated : ஜூலை 26, 2019 | Added : ஜூலை 26, 2019 | கருத்துகள் (199)
Share
Advertisement
புதுடில்லி: சகிப்புத்தன்மை குறித்து 49 பிரபலங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி, இது குறித்து அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும் எனக்கூறியுள்ளார்.கடிதம்'பிரதமர் மோடிக்கு திறந்த கடிதம்' என்ற பெயரில், தமிழ் நடிகை, ரேவதி, சினிமா பிரபலங்கள், ஷியாம் பெனகல், அபர்ணா சென், சவ்மித்ரா
dustbin, Subramanian Swamy, intolerance, letter, celebrities, PM Modi, பிரபலங்கள், கடிதம், பிரதமர் மோடி, சுப்ரமணியன் சாமி, சகிப்புத்தன்மை, குப்பைத்தொட்டி,

புதுடில்லி: சகிப்புத்தன்மை குறித்து 49 பிரபலங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி, இது குறித்து அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும் எனக்கூறியுள்ளார்.


கடிதம்'பிரதமர் மோடிக்கு திறந்த கடிதம்' என்ற பெயரில், தமிழ் நடிகை, ரேவதி, சினிமா பிரபலங்கள், ஷியாம் பெனகல், அபர்ணா சென், சவ்மித்ரா சாட்டர்ஜி, வரலாறு அறிஞர், ராமச் சந்திர குகா போன்ற, 49 பிரபலங்கள், வெளியிட்டு உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மாறுபாடான கருத்துகளை கொண்டது தான் ஜனநாயகம். பெரும்பான்மையான கருத்துக்கு, எதிராக பேசுவோர், சமூக விரோதிகளாகவும், நகர்புற நக்சல் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படு கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, 2016ல், தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் களின் எண்ணிக்கை, 840 ஆக உள்ளது. தலித், சிறுபான்மையினர், முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு, மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். அமைதியை போதித்த ராமபிரானை போற்றும், 'ஜெய் ஸ்ரீராம்' மந்திரத்தை, போர் அறைகூவல் போல சிலர் உச்சரிக்கின்றனர். இது, அமைதியை விரும்பும், இந்தியராக இருப்பதை பெருமையாக கருதும்,எங்களை போன்றவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. அப்பாவிகள் அடித்து கொல்லப்படுவதை கண்டித்து, பார்லிமென்டில் நீங்கள் பேசி உள்ளீர்கள்; அது போதாது. அத்தகைய தாக்குதலை துாண்டி விட்டவர்கள் மீது, நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன, என்பதை அறிய விரும்புகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news

கோபம்இந்த கடிதம் தொடர்பாக ஆங்கில டிவி ஒன்றுக்கு பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியன்சாமி அளித்த பேட்டி: பிரதமருக்கு கடிதம் எழுத உரிமை உள்ளது. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்பது எல்லாம் கிடையாது. இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு. சகிப்புத்தன்மை இல்லை என எதனை அவர்கள் கூறுகின்றனர்? அவர்களில் யாராவது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரா? அவர்கள் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் வழக்குகளை சந்தித்துள்ளனரா? சகிப்புத்தன்மை இல்லை என பேசுவது தற்போது, நாகரீகமாகிவிட்டது என நினைக்கிறேன். சர்வதேச கவனத்தை பெறவும் இது போன்று நடக்கின்றன. இதற்கு பின்னால், கெட்ட நோக்கம் உள்ளது. நான் பிரதமராக இருந்தால், கடிதத்தை படிக்காமல், குப்டை தொட்டியில் போடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Azhagu Karuppaiah Jayaraman - Madurai,இந்தியா
30-ஜூலை-201916:17:59 IST Report Abuse
Azhagu Karuppaiah Jayaraman ஸ்வாமி சொன்னது மிகச்சரி
Rate this:
Cancel
Civilion - Trichy,இந்தியா
30-ஜூலை-201916:12:37 IST Report Abuse
Civilion kirukupaya pulla
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
30-ஜூலை-201910:16:31 IST Report Abuse
chander வழக்கமா செய்றத சொல்லியிருக்காரு ஸ்வாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X