எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
‛'சபையில் எச்சரிக்கை விடுக்கக் கூடாது'
வைகோவுக்கு வெங்கையா அட்வைஸ்

மத்திய அமைச்சர் ஆணவம் காட்டுகிறார் என்றும், மத்திய அரசை எச்சரித்தும், தமிழக, எம்.பி., வைகோ பேசியதால், ராஜ்யசபாவில் பரபரப்பு ஏற்பட்டது.

 ‛'சபையில், எச்சரிக்கை, விடுக்க, கூடாது'

பூஜ்ய நேரத்தில் பேசுவோர், மூன்று நிமிடங்களுக்குள், தங்களது பேச்சை முடிக்க வேண்டும். அதன் பிறகு மைக் 'ஆப்' ஆகிவிடும் என்பதால், எம்.பி.,க்கள் சுருக்கமாக பேசுவர்.



பரபரப்பு




சமீபத்தில், ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வாகிஉள்ள, ம.தி.மு.க.,வின் வைகோ, ஏற்கனவே பார்லிமென்ட் அனுபவம் உள்ளவர் என்பதால், தன் கன்னி உரையை இந்த காலக்கெடுவுக்குள் முடிக்க முயன்றார். இதற்காக, உரையை, வேக வேகமாக பேசிக் கொண்டே சென்றவர், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை, கடுமையாக

விமர்சித்தார்.தன் கன்னி உரையில், யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்பதை, சாதகமாக பயன்படுத்தி, புயல் வேகத்தில் பேசிய வைகோ, மத்திய அரசை எச்சரித்ததால்,சபையில் பரபரப்பு நிலவியது.




அவர் பேசியதாவது;ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால், காவிரி டெல்டா நிலங்கள் பாழாகும். இந்த அழிவு திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.




'என்ன வந்தாலும் சரி; திட்டங்களை நிறைவேற்று வோம்' என,ஆணவமாக கூறியுள்ளார்.இத் திட்டங் கள் மூலம், மத்திய அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கலாம். ஆனால், காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகி விடும்; வருங்கால தலைமுறை யினர், உணவுக்கு தட்டேந்தி நிற்குமளவுக்கு, எத்தி யோப்பியா போல மாறிவிடும்.எனவே, மத்திய அரசு, தன் முடிவை கைவிடவேண்டும்; மீறினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என, எச்சரிக்கிறேன். இவ்வாறு, வைகோ பேசினார்.




இந்த எச்சரிக்கையை கேட்டு அதிர்ந்த, ராஜ்யசபா

Advertisement

தலைவர், வெங்கையா நாயுடு கூறியதாவது: சபைக்குள் எச்சரிக்கை எல்லாம் விடுக்க முடியாது, மிஸ்டர் வைகோ; நீங்கள் குறிப்பிட விரும்பும் கருத்தை தெரிவித்து விட்டீர்கள்; அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை என் பரிந்துரையாகவோ அல்லது வேண்டு கோளாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.




இந்த சம்பவத்தால், ராஜ்யசபாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், பா.ம.க., சார்பாக, ராஜ்ய சபாவுக்கு தேர்வாகியுள்ள அன்புமணி, நேற்று பதவி ஏற்றார். இவரும், தன் உறுதிமொழியை தமிழிலேயே வாசித்து பதவிஏற்றார்.


-- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூலை-201920:27:26 IST Report Abuse

RajanRajanVAIKO சவுடால் பேச்சு பேசி அரசியல் பண்ணியதால் ராஜ்யசபாவில் பேசுகிறோம் அரசியல் மேடையில் அல்ல என்பதை மறந்து பரிமாறுவது தவறுதானே.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-201919:00:37 IST Report Abuse

r.sundaramகழுதைக்கு கற்பூர வாசனை தெரியவா போகிறது? தமிழ்நாட்டில் தெருமுனையில் பேசி பேசியே தமிழகத்தை கெடுத்தவர் அங்கு போயும் இங்கு பேசுவதுமாதிரியே பேசியுள்ளார். சாராய ஆலை நடத்தும் குடும்பத்தில் சபை நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா?

Rate this:
oce - tokyo,ஜப்பான்
27-ஜூலை-201918:40:56 IST Report Abuse

oceவாக்கில் சனி எதை சொன்னாலும் தப்பாகவே சொல்வார்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X