கலாம் சேர்த்த முத்தான சொத்து

Added : ஜூலை 26, 2019 | |
Advertisement
கலாம் சேர்த்த முத்தான சொத்துஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாமுக்கு சொந்த வீடு கூட இல்லை. ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் தனது அண்ணன் வீட்டிற்கே செல்வார். தன்னை பற்றி சிந்திக்காமல் நாட்டு மக்களை பற்றியே வாழ்நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். கலாமின் வங்கி கணக்கில் கூட பெரிதாக பணம் இல்லை. அவர் எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அவர் சேர்த்த ஒரே சொத்து மக்கள்...

கலாம் சேர்த்த முத்தான சொத்துஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாமுக்கு சொந்த வீடு கூட இல்லை. ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் தனது அண்ணன் வீட்டிற்கே செல்வார். தன்னை பற்றி சிந்திக்காமல் நாட்டு மக்களை பற்றியே வாழ்நாள் முழுவதும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். கலாமின் வங்கி கணக்கில் கூட பெரிதாக பணம் இல்லை. அவர் எந்த சொத்தும் சேர்க்கவில்லை.

அவர் சேர்த்த ஒரே சொத்து மக்கள்... மாணவர்கள்!இணைக்கப்படுமாநதிகள்?கலாம் கண்ட கனவுகளில் 'நதிகள் இணைக்கப்பட வேண்டும்' என்பது முக்கியமானது. ''இந்தியாவில் ஒரு பக்கம் வெள்ளத்தால் அழிவு, இன்னொரு பக்கம் தண்ணீரின்றி வறட்சியால் அழிவு. நதிகளை இணைத்தால் கூடுதலாக 16 கோடி ஹெக்டேர் பாசன வசதி பெறும். மக்களின் குடிநீர் தாகம் தீரும்,'' என்று கணித்தார் கலாம்.


அவரது நனவாகாத கனவுகளில், இதுவும் ஒன்று.சீன மொழியில் மலர்ந்த குறள்!சீனக்கவிஞர் யூசியிடம், கலாம் ஒரு கோரிக்கையை வைத்தார். 2 ஆயிரம் ஆண்டு கால பெருமைமிகு திருக்குறளை வழங்கி, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் வழங்கிப் படிக்கச் சொன்னார். படித்தது பிடித்திருந்தால், 'திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்' என வேண்டிக் கொண்டார்.


திருக்குறளை 5 ஆண்டுகளாக படித்து வந்த யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு, 2011ம் ஆண்டு உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார். திருக்குறளை சீன மொழிக்குக் கொண்டு சென்ற பெருமை கலாமையே சேரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X