பாதியாக சுருங்கிய விளிஞ்சியம்பாக்கம் ஏரி: பருவ மழைக்கு முன் சீரமைக்குமா அரசு?| Dinamalar

பாதியாக சுருங்கிய விளிஞ்சியம்பாக்கம் ஏரி: பருவ மழைக்கு முன் சீரமைக்குமா அரசு?

Added : ஜூலை 26, 2019 | |
-'ஆக்கிரமிப்புகளால் பாதியாகச் சுருங்கிய, ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, பருவ மழைக்கு முன் மீட்டு, துார் வாரி சீரமைக்கப்பட வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நீராதாரம்சென்னை, ஆவடியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, விளிஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. ஒரு காலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் இருந்தது; நிலத்தடி நீராதாரமாக விளங்கியது.இந்த ஏரியை பாதுகாக்க, பொதுப் பணித்
 பாதியாக சுருங்கிய விளிஞ்சியம்பாக்கம் ஏரி: பருவ மழைக்கு முன் சீரமைக்குமா அரசு?



-'ஆக்கிரமிப்புகளால் பாதியாகச் சுருங்கிய, ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, பருவ மழைக்கு முன் மீட்டு, துார் வாரி சீரமைக்கப்பட வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நீராதாரம்சென்னை, ஆவடியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, விளிஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. ஒரு காலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் இருந்தது; நிலத்தடி நீராதாரமாக விளங்கியது.இந்த ஏரியை பாதுகாக்க, பொதுப் பணித் துறை உரிய அக்கறை காட்டவில்லை. இதன் விளைவு, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில், ஏரி சிக்கியது.இதற்கு, உள்ளாட்சி அமைப்பும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவும் கிடைத்ததால், கொஞ்சம் கொஞ்சமாக, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ஏரி, பாதி அளவுக்கு காணாமல் போய்விட்டது.தற்போது, 60 ஏக்கர் மட்டுமே மிஞ்சியுள்ளதாக, கோப்புகளில் கூறப்படுகிறது. ஆனால், முறையான அளவீடு செய்தால், பாதி கூட இருக்குமா என, தெரியவில்லை.இந்த ஏரியை தவிர, அதே பகுதியில், சேக்காடு ஏரி, கோவிந்தன் தாங்கல் ஏரி, பருத்திப்பட்டு ஏரி ஆகியவை உள்ளன.கவரப்பாளையத்தில் உள்ள, கோவிந்தன் தாங்கல் ஏரியின் உபரி நீர், கால்வாய் வழியாக, விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கு செல்லும். அங்கிருந்து வெளியேறும் உபரி நீர், பருத்திப்பட்டு ஏரிக்குச் செல்லும்.இணைப்புஇப்படி ஏரிகள், ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இந்த உபரி நீர் கால்வாய்களையும் காணவில்லை; எல்லாமே ஆக்கிரமிப்பில் சிக்கி விட்டன.இதனால், பலத்த மழை பெய்யும் காலங்களில், மழைநீர் ஏரிகளுக்கு செல்ல வழியின்றி, வீடுகளுக்குள் வெள்ளம் பாயும் நிலை ஏற்பட்டது.ஆக்கிரமிப்பாளர்களுக்கு, மின் வாரியம், மின் இணைப்பு வழங்கியும், வருவாய் துறையினர்,பட்டா கொடுத்தும்,ஆசிர்வதித்துள்ளனர்.ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர், ஏரிக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, செயல்படுகின்றனர்.ஏற்கனவே, நிலத்தடி நீர் கிடைக்காமல், மக்கள் திண்டாடி வரும் நிலையில், ஆவடி பருத்திப்பட்டு ஏரியை மீட்டு, பசுமை பூங்கா அமைத்தது போல், விளிஞ்சியம்பாக்கம் ஏரியை மீட்டு, துார் வாரி சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
- - - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X