தொடர் கட்டுரை - 33/ இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!| Dinamalar

தொடர் கட்டுரை - 33/ இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!

Added : ஜூலை 26, 2019 | |
பிச்சையல்ல கெஞ்ச; தண்ணீர் தேசிய உரிமை!கவனிப்போமா காவிரியை?கறுப்பாய் நடக்கும் சாயநதி - அன்றுகடும்புனலாடிய மாயநதி!பாலித்தீன் பைகள் மறைக்கும் நதி - அன்றுபால்நிலா மிதந்து நுரைத்த நதி!மணல் லாரியால் முனகும் நதி - அன்றுமடியால் சுரந்த பாச நதி!- புவனியாள்தமிழக பொதுப்பணித் துறையின், முன்னாள் தலைமை பொறியாளர், அ.வீரப்பன், நதிநீர் தொடர்பான தன் கருத்துகளை பகிர்ந்து
 தொடர் கட்டுரை - 33/ இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!

பிச்சையல்ல கெஞ்ச; தண்ணீர் தேசிய உரிமை!கவனிப்போமா காவிரியை?கறுப்பாய் நடக்கும் சாயநதி - அன்றுகடும்புனலாடிய மாயநதி!பாலித்தீன் பைகள் மறைக்கும் நதி - அன்றுபால்நிலா மிதந்து நுரைத்த நதி!மணல் லாரியால் முனகும் நதி - அன்றுமடியால் சுரந்த பாச நதி!- புவனியாள்தமிழக பொதுப்பணித் துறையின், முன்னாள் தலைமை பொறியாளர், அ.வீரப்பன், நதிநீர் தொடர்பான தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்...தமிழகம், நாட்டின் தென்கோடியில் இருப்பதால் தான், எல்லா வகையிலும் தனிச்சிறப்போடு இருக்கிறது. இதே காரணத்தால் தான், மத்திய அரசின் திட்டங்கள் கிடைப்பதிலும், தண்ணீர் தொடர்பான அணுகுமுறையிலும் சிரமம் ஏற்படுகிறது.மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழகத்துக்கான காற்றை மட்டுமல்ல, மழையையும் தடுத்து விடுகிறது. சிறிய பரப்புள்ள கேரளாவில், பெரிய அளவிலான ஆறுகள் உற்பத்தியாகி, கடலில் கலக்கின்றன. கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும், உபரி நீர் உள்ளது.அங்கிருந்தெல்லாம் புறப்பட்டு, நம் எல்லையைக் கடந்து, கடலுக்கு ஓடிய ஆறுகள், தடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், தண்ணீர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.மழைநீர்தமிழகத்தில் பாயும், காவிரி, முல்லை -பெரியாறு, பாலாறு, தென்பெண்ணையாறு, சிறுவாணி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளின் ஓட்டம், பிற மாநிலங்களின் மழைநீரை நம்பித்தான் இருக்கின்றன.தமிழகத்தின் தலைநகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கிய, தொண்டை நாட்டை வளமாக்கியது பாலாறு. கர்நாடக மாநிலத்தின், நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகி, கோலார் மாவட்டம் வழியாக, 96 கி.மீ., துாரம் பயணித்து, ஆந்திராவுக்குள் நுழைகிறது. சித்துார் மாவட்டம் வழியாக, 48 கி.மீ., பயணித்து, தமிழகத்தின் வேலுாரை அடைகிறது.வேலுார் எல்லையில், நாராயணபுரம் ஆறு, கல்லாறு, கொட்டாறு, கோவில்மலை ஆறு, அகரம் ஆறு, பேர்ணாம்பட்டு ஆறு, கவுண்டனிய நாகநதி உள்ளிட்ட ஆறுகளும், பாலாற்றில் கலக்கின்றன.அவை இணைந்து, காஞ்சிபுரம் வழியாக, 224 கி.மீ., பயணித்து, வாயலுார் என்னும் இடத்தில், வங்கக் கடலில் கலக்கிறது.ஒப்பந்தம்வேலுார் மாவட்டத்தில், பாலாற்றின் குறுக்கே, வாலாஜாபேட்டைக்கு அருகில் கட்டப்பட்ட தடுப்பணையும், வெட்டப்பட, 606 கால்வாய்களும், 317 ஏரிகளுக்கு நீரை வழங்கி வந்தன.பாலாற்றில், கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து, 1892 ஒப்பந்தம் கூறுகிறது.கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்தியஸ்தர் அல்லது மத்திய அரசு வழியாக தீர்த்துக் கொள்ளலாம் என, ஒப்பந்தத்தின், 1, 3, 4ம் ஷரத்துக்கள் கூறுகின்றன. அதே ஒப்பந்தம், 1924ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த, 20 ஆண்டுகளாக, பாலாற்றுக்கான தண்ணீரை மறித்து, கர்நாடகா, புதிய ஏரி, குளங்களில் நிரப்பிக் கொள்கிறது.அடுத்துள்ள ஆந்திர அரசும், குப்பம் தாலுகா, கணேசபுரத்தில் பெரிய அணை கட்ட திட்டமிட்டு, முதல்கட்டமாக, 20 அடி உயரமுள்ள, 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இன்னும், பல தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால், பாலாறு வறண்டு போய்விட்டது.பாலாற்று நீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டத்தில், விவசாயம் நடைபெற்றது. அதிலும், நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.இந்த ஆற்றின் வழியாக கிடைத்த, 40 டி.எம்.சி., நீரை, விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீராக பயன்படுத்திய, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னைப் புறநகர் பகுதிகள், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளும், கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், வேலுார் மாவட்டத்தின், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகள், ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள், கட்டுப்பாடில்லாமல் ஆற்றில் வெளியேற்றப்படுகின்றன.இதனால், அவ்வப்போது வெளியேற்றப்படும் உபரி நீரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரையும், கால்வாய்கள் வழியாக, பாலாற்றுக்கு அனுப்ப வேண்டும். ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, தனியார் குடிநீர் விற்பனை நிலையங்கள் உறிஞ்சுகின்றன.இது போன்ற, வணிக நோக்கிலான தண்ணீர் சுரண்டலுக்கும், தொழிற்சாலை கழிவுகளை விடுவதற்கும், அரசு, தடைவிதிக்க வேண்டும்.பாலாற்றின் குறுக்கே, 50 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை, திருமுக்கூடல், வாயலுாருக்கு இடையில், 10 கி.மீ.,க்கு ஒரு தடுப்புச்சுவர் என, கட்டி நீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.சிறுவாணிமலைவளம், மழைவளம் மிக்க, சேரநாட்டின் பெரும்பகுதி, தற்போது, கேரள மாநிலமாக உள்ளது. சேரநாட்டின் கிழக்குப் பகுதியான, கொங்கு மண்டலம் தமிழகத்தில் உள்ளது.கேரளாவில் உற்பத்தியாகி, கொங்கு நாட்டை செழிக்க செய்த ஆறுகள், தற்போது, சிக்கலில் உள்ளன.அதில் முதன்மையானது, சிறுவாணி ஆறு. கோவையில் இருந்து, 40 கி.மீ.,யில் உள்ள, சிறுவாணி அணை தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆனால், ஆறு உருவாகும் முத்துக்குளம் பகுதி கேரளாவுக்குச் சொந்தமானது.தமிழகத்தில் தோன்றினாலும், கேரளாவில், 25 கி.மீ., ஓடியபின், பவானியாற்றில் கலக்கிறது.இங்கே தான், கேரளா, அணை கட்ட துடிக்கிறது. கேரளா அணை கட்டிவிட்டால், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான குடிநீர் கிடைக்காது. 40 ஆண்டுகளுக்கு முன், அட்டப்பாடி பள்ளத்தாக்கு பாசனத்திட்டத்தை, கேரளா அறிவித்தது.அட்டப்பாடி தாலுகா, சித்துாரில், சிறுவாணி பல்நோக்குத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதன்படி, 4.5 டி.எம்.சி., நீரை பாசனத்துக்கும், 3 மெகாவாட் மின்சாரத்தையும் தயாரிக்க திட்டமிட்டு, 400 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதித்து விட்டது.இந்த திட்டம் நிறைவேறினால், கீழ்பவானி ஆற்றின் குறுக்கேயுள்ள, பில்லுார் நீர்த்தேக்கத்தில் வரத்து குறையும். மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.கீழ்பவானி, தடப்பள்ளி, ஆறன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களுக்கான தண்ணீர் கிடைக்காமல், அப்பகுதிகளின் விவசாயம் பொய்க்கும்.கேரளாவின் மலைகளில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி கடலில் கலக்கும், 2,200 டி.எம்.சி., தண்ணீரில், பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.ஆனால், தன் உணவுக்கான அரிசியில் இருந்து, அனைத்து பொருட்களுக்கும் தமிழகத்தைச் சார்ந்திருக்கும் கேரளா, தமிழகத்துக்கான உரிமையை தடுக்க நினைப்பது தான், துரோகத்தின் உச்சம்.பிற மாநிலங்களிடம் கெஞ்ச, தண்ணீர் ஒன்றும் பிச்சையல்ல; நம் தேசிய உரிமை!பாண்டியாறுநீலகிரி மாவட்டம், 'ஓ' பள்ளத்தாக்கில் உருவாகி, தமிழகத்தில் ஓடி, கேரளாவின் புன்னப்புழாவுடன் கலக்கிறது, பாண்டியாறு.இதற்கிடையில், கேரள பகுதியில், தடுப்பணை கட்டி, நீர்மின்சக்தி திட்டத்தை செயல்படுத்தும்படி, கேரளாவுக்கு, தமிழகம் கோரிக்கை வைத்து வருகிறது. அதாவது, 'கேரளாவுக்கு மின்சாரம்; தமிழகத்துக்கு தண்ணீர்' என்ற திட்டத்தை, கேரளா பொருட்படுத்தவில்லை.இந்நிலையில், நாம், தமிழக எல்லையிலேயே, பாண்டியாற்றின் குறுக்கே, பல தடுப்பணைகளை கட்டி, தண்ணீரை சேமிக்க வேண்டும். அந்த தண்ணீரை, கூடலுாருக்கு அருகில் உள்ள தொப்பக்காடு வழியாக, மோயாற்றில் கலக்கவிட்டு, பவானிசாகர் நீர்த்தேக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.இப்படி செய்ய, 60 கோடி ரூபாய் தான் செலவாகும். இதனால், கிடைக்கும், 3 டி.எம்.சி., தண்ணீரில், 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும்.மேலும், பாண்டியாற்று நீரை, கேரளாவுக்கு வழங்க, இதுவரை எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அதனால், அந்த தண்ணீரை முழுக்க நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.வேறெந்தெந்த நதிகளில், நம் உரிமையை மீட்க வேண்டும் என்ற விபரம் அடுத்த கட்டுரையில்.- நடுவூர் சிவாnaduvoorsiva@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X