பொது செய்தி

இந்தியா

அன்னத்தை அள்ளி செல்லும் எம்.எல்.ஏ.

Updated : ஜூலை 27, 2019 | Added : ஜூலை 27, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
கவுகாத்தி: அசாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர், தனது உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில்
Mrinal Saikia, Free food, medicines, paddy saplings, Assam,  MLA , அசாம், எம்எல்ஏ,உணவு

கவுகாத்தி: அசாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர், தனது உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.


latest tamil news

வாகனம்இந்நிலையில், அசாமின் அம்தய் தொகுதியில் இருந்து தேர்வான பா.ஜ., எம்.எல்.ஏ., மிரினால் சாய்கியா, தனது சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகித்து வருகிறார். இதுவரை அவர் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்துள்ளார். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அவரே உணவு தயாரிக்கிறார். இதற்காக, வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதில், உணவு சமைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.


latest tamil news


Advertisement
மருத்துவ முகாம்இது தொடர்பாக மிரினால் சாய்கியா கூறுகையில், வெள்ளத்தால், உதவ வேண்டும் என்பதற்காக சொந்தமாக வாகனம் வாங்கினேன். முதல்நாள் சொந்த செலவில் உணவு சமைத்து வநியோகம் செய்தேன். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த பலர், தாமாக முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது, தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளது. இதனால், நன்கொடையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதே எனது நோக்கம். அவர்களுக்கு, அரிசியும், பருப்பும் இலவசமாக வழங்க முடியும். ஆனால், அவர்கள் சமைப்பதில் சிக்கல் ஏற்படும். எனது தொகுதியான கும்தய் மற்றும் அருகில் உள்ள போகாகாட் தொகுதியில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளேன்.


latest tamil news
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்களால் பாதிக்கப்படும். இதனால், மொபைல் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டேன். இதற்காக அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவினர். அரசே, மருந்துகளை விநியோகம் செய்தது என்றார்.


latest tamil news

விவசாயிகளுக்கு நெல் நாற்றுகள்மேலும், மிரினால் சாய்கியா, விவசாயிகளுக்கு, இலவசமாக நெல் நாற்றுகளை வழங்கி வருகிறார். இதுவரை 800 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். பொது மக்களுக்கு உதவுவதே எனது நோக்கம் எனக்கூறும் அவர், எம்எல்ஏ.,வாக பதவியேற்பதற்கு முன்னரும் இவ்வாறு உதவி செய்துள்ளேன் என்கிறார். இவரின் இந்த பணியை தொகுதி மக்கள் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஜூலை-201909:40:33 IST Report Abuse
அம்பி ஐயர் இதே நம்ம ஊரு ஆளுங்களா இருந்தா... ஸ்டிக்கர் ஒட்டி... அதை மாத்தி ஒட்டி.... விளம்பரம் தேடியிருப்பானுங்க.... அதுவும் ஓசி பிரியாணிக்காரனுங்களப் பத்திக் கேட்கவே வேண்டாம்....
Rate this:
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
28-ஜூலை-201906:17:18 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் மிரினால் சாய்கியா தொண்டு பாராட்டிற்குரியது. பிற மக்கள் சார்பாளர்களும் பின்பற்ற வேண்டும். இச்செய்தியைப் பதிந்த தினமலருக்குப் பாராட்டு. ஆனால் அன்னத்தை 'அள்ளி செல்லும் எம்.எல்.ஏ.' எனக் குறிப்பிட்டுள்ளது படிப்பவர்களைக் கவரும் தலைப்பு என்பதாலா? விரைவான செய்தியைத் தரும் ஆவலில் இடம் பெற்ற தலைப்பா? அள்ளிச் செல்வது என்றால், திருடி அல்லது வழிப்பறி செய்து தன் தேவைக்காக எடுத்துச் செல்வதை அல்லவா குறிக்கும். எனவே, தலைப்பை 'அள்ளிக்கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்' என மாற்ற வேண்டுகிறேன். இணையக்குறிப்பில் ஆங்கிலத்தில் இலவச உணவு முதலியன எனச் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில்தான் தடுமாற்றம். இவ்வாறு தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் பண்பு தினமலருக்கு உண்டு என்பதால்தான் குறிப்பிடுகின்றேன. எடுத்துக்காட்டாக 18.07.2019 அன்று 'அறிவியல் ஆயிரம்' தலைப்பில் ஆல்ப்பு மலை குறித்த தவறான செய்தியைச் சுட்டிக்காட்டி இருந்தேன். என் கருத்தின் மையப் பகுதியை வெளியிட்டுஇருந்தாலும் செய்தியையே எடுத்து விட்டீர்கள். அதுபோல் இதைனயும் திருத்த இணையப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகிறேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
28-ஜூலை-201905:34:46 IST Report Abuse
LAX "அன்னத்தை அள்ளி செல்லும் எம்.எல்.ஏ." - இந்த தலைப்பை மாத்துங்க அய்யா.. படிக்கும்போதே ஏதோ 'எங்கயோ வழங்கும் உணவைத்தான் ஒரு எம்.எல்.ஏ. அள்ளிக்கிட்டு போறாரோ' ங்கறா மாதிரியே இருக்கு.. 'அன்னத்தை அள்ளி வழங்கும் எம்.எல்.ஏ.' ன்னு போடுங்களேன்..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூலை-201907:51:48 IST Report Abuse
skv srinivasankrishnaveniநான்கூடமுதல்ல படிச்சுட்டு என்னடா இதுன்னு பாத்தேன் எம்எல்ஏவின் நல்லமனம் தெரிஞ்சுது மிக்கநன்றி ஐயா இவ்ளோ வெள்ளநீரையும் கால்வாய்களை அமைத்து வறண்ட பூமிக்கும் போகும்படி செய்தால் நன்னாயிருக்குமே முக்காலும் சாவாமயிருப்பாளே நான் எஞ்சினியர் இல்லீங்க வெறும் PUC தான் சரித்திரத்தில் பல மன்னர்கள் இதுபோல கால்வாய்களா வெட்டி மழைநீரை நீரில்லை இடங்களில் செல்லும்படி படிச்சுருக்கேன் அதான் சொல்லுகிறேன் இப்போதான் எவ்ளோ பேருங்க பொறியியல்படிச்சு பட்டதாரிகளாயிட்டு வெளிக்கிடைக்காமல் நிக்குறாங்க இதுபோல ஏதாச்சும் செய்தால் நல்லது மிக்க நன்றிங்கய்யா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X