அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சியை எப்படியாவது வளர்க்கணும்
தமிழகத்தில் மல்லுக்கட்டுது பா.ஜ.,

தமிழகத்தில், ஆட்சியை பிடிக்கும் வகையில், கட்சியை பலப்படுத்த, பா.ஜ., தலைமை முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.

  கட்சியை, எப்படியாவது, வளர்க்கணும், தமிழகத்தில் மல்லுக்கட்டுது ,பா.ஜ.,


நாட்டில் உள்ள, அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது, பா.ஜ., தலைவர், அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் விருப்பமாக உள்ளது. அதற்கேற்ப, அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ.,ஆட்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.


பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, ஆட்சி அமைத்து வருகின்றனர்.தென் மாநிலங்களில், கர்நாடகா வில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து, பா.ஜ., தேசிய தலைமை, தமிழகத்தை சேர்க்க வேண்டும் என்று,குறிவைத்துள்ளது.

தமிழகத்தில், கட்சியை வலுப்படுத்த, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது.



ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு லட்சம் முதல், மூன்று லட்சம் பேரை, உறுப்பினர்களாக நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை நிறைவேற்ற, கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகின்றனர். அதிக உறுப்பினர்களை சேர்ப்போருக்கு, பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



உறுப்பினர் சேர்க்கை, ஒருபுறம் நடந்து வரும் நிலையில், பிரபலங்களை கட்சியில் சேர்ப்பதற் கான பணியும் நடக்கிறது. தேசிய அளவில், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை, பா.ஜ.,வில் சேர்க்க, இளைஞர் அணி தேசிய துணைத் தலைவர்முருகானந்தம் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.



இக்குழுவினர், தமிழக பிரபலங்களை, கட்சியில் சேர்க்க பேச்சு நடத்தி வருகின்றனர். எழுத்தாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தனித்துவம் மிகுந்தவர்கள்

Advertisement

போன்றோரை, பா.ஜ.,வில் சேர்க்க, முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.இது தவிர, கர்நாடகம், கேரளா மாநிலங்களில், முழு நேரப் பணியாளர் களாக உள்ளவர்களை, தமிழகத்திற்கு அனுப்பி, கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.


தி.மு.க., உட்பட பிற கட்சிகளில், அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளை, பா.ஜ.,விற்கு இழுக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. விரைவில், அதிரடி நடவடிக்கைகளை, கட்சி தலைமை இறங்கும் என, பா.ஜ., நிர்வாகிகள் நம்பிக்கையில் உள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-201916:54:45 IST Report Abuse

kulandhai Kannanதமிழக தலைவராக அர்ஜுன் சம்பத்தை நியமிக்கவேண்டும்.

Rate this:
rm -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-201916:12:42 IST Report Abuse

rmBJP should stop the attitude of stepmother treatment to TN.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூலை-201915:45:20 IST Report Abuse

Pugazh Vதமிழக த்தில் இலவசம் டாஸ்மாக் என்று ஏன் எழுதுகிறார்கள்?? எந்த மாநிலத்தில் மது இல்லை? எந்த மாநிலத்தில் இலவசம் இல்லை??

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201919:10:21 IST Report Abuse

sankarமது இல்ல மாநிலம் குஜராத் . ...

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
28-ஜூலை-201923:08:47 IST Report Abuse

Mirthika Sathiamoorthiஅப்போ அங்கே கேளிக்கை விடுதிகள் பார் கிளப், நட்சத்திர விடுதிகள் எதுவும் இல்லையா? அப்பாடியே இருந்தாலும் அங்கெல்லாம் மது விக்கறது இல்லையா? அது என்ன மது இல்ல மாநிலம்? ...

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X