இந்தோனேஷியாவில் திருட்டு:அவமானம் தேடி தந்த இந்தியர்

Updated : ஜூலை 28, 2019 | Added : ஜூலை 28, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement
இந்தோனேஷியாவில் திருட்டு:அவமானம் தேடி தந்த இந்தியர்

ஜகார்தா,:இந்தோனேஷிய நாட்டு ஓட்டல் அறையில் உள்ள பொருட்களை திருடிய இந்திய குடும்பம் பற்றிய'வீடியோ' சமூகவலைத்தளங்களில் நேற்று பரவியது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவுக்கு இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றுள்ளது.அங்கு பாலி தீவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இந்தியாவுக்கு திரும்ப நேற்று ஓட்டல் அறையை காலி செய்து புறப்பட்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் ஒருவர்அவர்கள் சென்ற காரை மறித்து அவர்களது பெட்டிகளை பரிசோதித்தார். அவற்றில் ஓட்டலுக்கு சொந்தமான துண்டுகள் எலக்ட்ரானிக் பொருட்கள் அலங்கார பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தார்.


latest tamil news
இதையடுத்து சிக்கிக் கொண்ட பெண் 'இந்தப் பொருட்களுக்கு உரிய விலையை கொடுத்து விடுகிறோம்' என கெஞ்சுகிறார்.ஆனால் ஓட்டல் மேலாளரோ 'இது மிகவும் தவறான செயல்; பணம் எங்களது பெரிதல்ல நம்பிக்கைதான் முக்கியம்' என்கிறார்.இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஹேமந்த் என்ற இந்தியர் இதை'டுவிட்டரி'ல் பதிவேற்றியுள்ளார்.

'வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இந்தியரும் தாம் தாய்நாட்டின் பிரதிநிதி என்பதை உணர வேண்டும். இதுபோன்ற அவமானம் தேடித்தரும் நபர்களின் பாஸ்போர்ட்களை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த வீடியோ நேற்று வைரலாகியது.


Advertisement


வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - Hamilton,நியூ சிலாந்து
01-ஆக-201911:29:10 IST Report Abuse
anbu இதுபோன்ற அவமானம் தேடித்தரும் நபர்களின் பாஸ்போர்ட்களை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் . வடநாட்டினர்கள் தான் இதை செய்கிறார்கள். தமிழகம் மற்றும் வெளி நாடுகள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Rate this:
Cancel
aries1942 - Mysore,இந்தியா
30-ஜூலை-201914:05:07 IST Report Abuse
aries1942 A list of Dos and Donts in their language must be given to those who go on international travel by the concerned Airport authorities at time of departure. Many a time Indians/ youths have brought bad name to our country by vulgar behaviour to women abroad.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூலை-201907:43:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni கண்றாவிகள் பணக்காரன் கள்ளம்பண்ணால் கிளெப்டோமேனியான்னு சொல்லிடுவானுக இல்லாதவன் பசிக்கு கள்ளம் பண்ணால் தெருவிலே இருக்கும் பெக்ஜ்ர் கூட நாலு சாத்துசாத்துவான் , அசிங்கம் இதுபோலத்தான் யு எஸ்லேயும் ஒரு நம்மூர்லேடி காதிலே காஜூ கிஷ்மிஷ் எல்லாம் கள்ளம் பண்ணிட்டு மாட்டிண்டா அவ புருஷன் வெளியுறவுத்துறையே பெரிய அதிகாரி அப்பாவும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்லே பெரிய ஆபீசர் மந்திரியின் அருளால் அவ ஜெயிலுக்குப்போலே ஆனால் அவபுருஷனை இந்தியக்கே திருப்பி அனுப்பியது யு எஸ் ஏ தேவையா? 1954லே நடந்தது இந்த அசிங்கம் .,கிளெப்டோமேனிய அவளுக்குன்னு ஒரு டாக்டர் செர்டிபிகேட் தந்தான் அதனால் தப்பிச்சா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X