இந்தோனேஷியாவில் திருட்டு:அவமானம் தேடி தந்த இந்தியர்| Indian family steals accessories from Bali hotel, caught by staff. Viral video shocks Internet | Dinamalar

இந்தோனேஷியாவில் திருட்டு:அவமானம் தேடி தந்த இந்தியர்

Updated : ஜூலை 28, 2019 | Added : ஜூலை 28, 2019 | கருத்துகள் (72)
Share
ஜகார்தா,:இந்தோனேஷிய நாட்டு ஓட்டல் அறையில் உள்ள பொருட்களை திருடிய இந்திய குடும்பம் பற்றிய'வீடியோ' சமூகவலைத்தளங்களில் நேற்று பரவியது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவுக்கு இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றுள்ளது.அங்கு பாலி தீவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.இந்தியாவுக்கு திரும்ப நேற்று ஓட்டல் அறையை காலி செய்து புறப்பட்டனர். அப்போது ஓட்டல்
இந்தோனேஷியாவில் திருட்டு:அவமானம் தேடி தந்த இந்தியர்

ஜகார்தா,:இந்தோனேஷிய நாட்டு ஓட்டல் அறையில் உள்ள பொருட்களை திருடிய இந்திய குடும்பம் பற்றிய'வீடியோ' சமூகவலைத்தளங்களில் நேற்று பரவியது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவுக்கு இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றுள்ளது.அங்கு பாலி தீவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இந்தியாவுக்கு திரும்ப நேற்று ஓட்டல் அறையை காலி செய்து புறப்பட்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் ஒருவர்அவர்கள் சென்ற காரை மறித்து அவர்களது பெட்டிகளை பரிசோதித்தார். அவற்றில் ஓட்டலுக்கு சொந்தமான துண்டுகள் எலக்ட்ரானிக் பொருட்கள் அலங்கார பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தார்.


latest tamil news
இதையடுத்து சிக்கிக் கொண்ட பெண் 'இந்தப் பொருட்களுக்கு உரிய விலையை கொடுத்து விடுகிறோம்' என கெஞ்சுகிறார்.ஆனால் ஓட்டல் மேலாளரோ 'இது மிகவும் தவறான செயல்; பணம் எங்களது பெரிதல்ல நம்பிக்கைதான் முக்கியம்' என்கிறார்.இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஹேமந்த் என்ற இந்தியர் இதை'டுவிட்டரி'ல் பதிவேற்றியுள்ளார்.

'வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இந்தியரும் தாம் தாய்நாட்டின் பிரதிநிதி என்பதை உணர வேண்டும். இதுபோன்ற அவமானம் தேடித்தரும் நபர்களின் பாஸ்போர்ட்களை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த வீடியோ நேற்று வைரலாகியது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X