திரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா

Updated : ஜூலை 28, 2019 | Added : ஜூலை 28, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: பார்லிமென்ட் தேர்தலில், பெரும் சறுக்கலை சந்தித்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, இதுவரையிலும், பிரதமர் மோடியை சந்திக்கவில்லை; அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.

பிரதமர் கனவில் இருந்த மம்தா, தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல், பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும், கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கட்சி, எம்.பி.,க்களும், பார்லிமென்டில், மத்திய அரசு எது செய்தாலும், அதை எதிர்த்து வருகின்றனர்.



latest tamil news




பெயர் மாற்றம்


கடந்த ஆண்டில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்ளா' என மாற்ற, மாநில சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு, மத்திய அரசு இதுவரையிலும் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தன் கட்சி, எம்.பி.,க்களை அழைத்த மம்தா, பிரதமரை சந்தித்து, இது குறித்து வற்புறுத்துங்கள் என, உத்தரவிட்டார். திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,க்களும், பிரதமர் மோடியை சந்திக்க, நேரம் ஒதுக்குமாறு கேட்டனர். பிரதமர் பிசியாக இருக்கிறார் என, பதில் தரப்பட்டது. வெறும், 5 நிமிடம் போதும் என, எம்.பி.,க்கள் சொல்ல, உடனே பிரதமரின், 'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது. விஷயத்தை, மோடியிடம் கறாராக சொல்லி விடுங்கள் என, தன், எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டார் மம்தா.


தேனீர் விருந்து


திரிணமுல், எம்.பி.,க்கள் மோடியை சந்தித்தனர். தேனீர், ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. 5 நிமிடங்கள் கடந்தன. மோடியோ, எம்.பி.,க்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். எம்.பி.,க்களும் பல விஷயங்களை மோடியிடம் பகிர்ந்தனர். இதற்கிடையே, மாநில பெயர் மாற்ற விஷயத்தையும், அவர்கள் பிரதமரிடம் சொன்னார்கள். ஐந்து நிமிட சந்திப்பு தானே; இவ்வளவு நேரம் என்ன செய்கின்றனர் என, சந்தேகப்பட்ட மம்தா, எம்.பி.,க்களுக்கு விடாமல் போன் செய்தார். ஆனால், யாரும் எடுக்கவில்லை. மம்தா, படு டென்ஷன் ஆனார். ஏற்கனவே, திருணமுல், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பா.ஜ.,வில் சேர்ந்திருக்கும் நிலையில். எம்.பி.,க்களையும் தன் பக்கம் இழுக்க, மோடி முயற்சி செய்கிறாரா என, அவருக்கு சந்தேகம்.


latest tamil news





சந்தேகம் தீரவில்லை


பிரதமர் அலுவலகத்திலோ, 5 நிமிட சந்திப்பு, 30 நிமிடங்கள் வரை, ஜாலியாக நடந்ததாம். மோடியை சந்தித்து, சந்தோஷமாக வெளியே வந்த, எம்.பி.,க்கள், பல, 'மிஸ்டு கால்'கள் இருந்ததை பார்த்து, மம்தாவிற்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னார்கள். அவர்களிடம், 'பிரதமரிடம் பேசியதை, விலாவாரியாக சொல்லுங்கள்' என, கேட்டு தெரிந்து கொண்டார் மம்தா. ஆனாலும், மம்தாவிற்கு சந்தேகம் தீரவில்லையாம்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
28-ஜூலை-201911:28:25 IST Report Abuse
R.Kalyanaraman இந்த மம்தா பானெர்ஜீ அம்மா ஏன் இவ்ளவு பயப்படுகிறார்கள். இந்த அம்மா இப்படி சந்தேகப்பட்டால் அவங்க பார்ட்டியில் ஒரு நாள் எல்லோரும் ஓடிவிடுவார்கள். இவங்களுக்கு அரசியல் நாகரீகமே தெரியவில்லை. ஒரு பழமொழி உண்டு. " மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " இவங்க பிரதம மந்திரி பதவிக்கு பிட் இல்லை. ஏன் CM போஸ்டுக்கே இப்படி கோவப்பட்டால் பிட் இல்லை. எதை எடுத்தாலும் சந்தேகம் என்றால் ஒன்றும் நடக்காது. மோடியை பிடிக்கவில்லை என்றால் அதற்க்கு என்ன செய்ய முடியும். மோடிஜி மக்களால் தேர்நயது எடுக்கப்பட்டவர். அவரை அவமானப்படுத்தினாள் 125 கோடி மக்களை அவமானப்படுத்துவதாகும் மம்தஜி. புரெய்ந்த்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-ஜூலை-201910:41:40 IST Report Abuse
A.George Alphonse பயம் .பயம். திக். திக்.
Rate this:
Share this comment
Cancel
28-ஜூலை-201909:53:11 IST Report Abuse
நக்கல் இவருக்கு இனி தூக்கம் கிடையாது., துக்கம் மட்டும்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X