நினைவெல்லாம் நித்யா

Added : ஜூலை 28, 2019
Advertisement
நினைவெல்லாம் நித்யா

உன் இதழ்கள் உச்சரிக்க சங்கத் தமிழும் ஏங்கும்... உறவாடும் உயிர் எழுத்துக்கள் உன்னை தங்கமென தாங்கும்... மெய் எழுத்துக்களின் மென்மைகளில் செய்த பெண்மை திறமைகளில் தெரியும் தரமான உண்மை என, ஊடகத்துறையில் கால்பதித்து திரைத்துறையில் பிரபல நடிகையாகி ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கப் போகும் நித்யாலட்சுமி மனம் திறக்கிறார்...
* ஊடகத் துறையில் உங்கள் அனுபவங்கள் ?சொந்த ஊர் சென்னை... கல்லுாரி படிப்பை முடித்த பின் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தேன். என் தெளிவான தமிழ் உச்சரிப்பால் செய்தி வாசிப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.

* செய்தி வாசிப்பாளர் நித்யா நடிகையானது ?'டிவி' தொடர்களில் நடிப்பதற்காக 'ஆடிஷன்'களில் பங்கேற்ற பின் இரண்டு 'டிவி' தொடர்களில் ஹீரோயினின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்தேன். ஒரு தொடரில் நான் நடித்த 'ரஞ்சித்' என்ற ஆண் கேரக்டர் பெரியளவில் ரீச் ஆனது.

* 'டிவி'யில் இருந்து சினிமாவுக்கு வந்தது ?ஆரம்பத்தில் சினிமாக்களில் கூட நான் செய்தி வாசிப்பாளராக தான் நடித்தேன். அந்த வகையில் 'அறம்' படத்தில் நிருபர், 'கனா' படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்தேன். தற்போது 'கோமாளி' படத்தில் நிருபராக நடித்துள்ளேன். என்னை அடையாளம் காட்டிய படம் 'கனா' தான்.

* 'டிவி'யில் செய்தியாளருக்கும் சினிமாவில் செய்தியாளருக்கும் என்ன வித்தியாசம் ?'டிவி' யில் 'லைவ்' செய்தி வாசிப்பது கொஞ்சம் கஷ்டம்; ரீ டேக் வாங்க முடியாது. சீரியல், சினிமாவில் ரீ டேக் வாங்கலாம். இரண்டிலும் தெரியாத விஷயங்களை கற்றுக் கொண்டு மக்களுக்கு சரியான செய்தியை, கருத்தை சொல்ல வேண்டும்.

* இடையில் மாடலிங் துறையில்...?மாடலிங் எனக்கு பிடித்த துறை, விதவிதமாக போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்கிறேன். அதன் மூலம் நிறைய மாடலிங் வாய்ப்புகள் வருகின்றன. என் பிரைடல் ஷூட் போட்டோ இன்ஸ்டாவில் அதிக லைக் வாங்கியது.

* கிராமிய ஆல்பத்தில் நடித்தது?கிராமிய கலைஞர் ஆத்தங்குடி இளையராஜாவின் 'வண்ண பூங்குருவி' என்ற பாடலில் நடித்துள்ளேன். இது இன்று வரை 'டிரண்டிங்'கில் இருக்கிறது. இதற்கு முன் நிறைய குறும்படங்களில் கூட நடித்துள்ளேன்.

* இனி நடிகையாகவே இருப்பீர்களா ?செய்திவாசிப்பாளரா, சினிமா நடிகையாக இருப்பதா என்ற குழப்பம் இருந்தது. பிறகு இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வாசிப்பு, நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்.

* நித்யா முன்னேற காரணம் யார், ஆசை என்ன ?என் முன்னேற்றதிற்கு அப்பா குமார், அம்மா அமுல், நண்பர்கள் தான் முக்கிய காரணம். பெரியளவில் ஆசை எல்லாம் இல்லை. ஆனால், ஆட்டிசம் குழுந்தைகளுக்காக பள்ளி துவங்கி நானே பயிற்சியளிக்க வேண்டும். பேஷன் டிசைனிங் ஆர்வம் உள்ளதால் 'பொட்டிக்' வைக்க விரும்புகிறேன்.Instagrame: nithunithya13

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X