தமிழ் சினிமாவில் உடலை வருத்தி அந்த கதாபாத்திரத்திற்காக உயிரைக் கொடுத்து நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். எந்த கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக 100 சதவீதம் ரசிகர்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் இவர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்...
* கமலுக்கும் உங்களுக்குமான அறிமுகம் ?'குருதிப்புனல்' படத்திற்கு டப்பிங் பேச சென்றேன். அவர் தான் அந்த படத்திற்கு வசனம் எழுதியவர். வசனங்களை ஒரு நடிகருக்கு எழுதி அவருக்காக என்னை பேச வைத்தார். அப்போது தான் அவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு அவருடைய தயாரிப்பில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.
* 'கடாரம் கொண்டான்'ல் கேரக்டர் குறித்து ?கே.கே. என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். டாட்டூ, ஹேர் ஸ்டைல் என என் தோற்றத்தையே மாற்றி விட்டனர். புதிய விக்ரமை காட்டி உள்ளனர். மலேசியா பாஷை எல்லாம் கூட பேசி இருக்கேன். இன்டர்நேஷனல் பிலிம் மாதிரி இருந்தது.
* எந்த கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள் ?எல்லா வகையான கதைகளில் நடிக்க விருப்பம். ஆனால் அது ரொம்ப பவர்புல்லா இருக்கணும்னு நினைப்பேன்.
* 'கடாரம் கொண்டான்'ல் நடிக்க சம்மதித்தது ?என் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. இது ஒரே நாளில் நடக்கும் கதை, படம் ஆரம்பிக்கிறது தெரியாது முடிவதும் தெரியாது. அவ்வளவு சூப்பரா எடுத்திருந்தாங்க. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புது கதை வரும். அந்த மாதிரி கடாரம் கொண்டான் கதையும் புதிது தான்.
* இதுவரை நீங்கள் நடித்த படங்களில் சிரமம் ?சங்கரின் 'ஐ' படத்தில் உடல் ரீதியான அளவில் கஷ்டப்பட்டேன். இப்போது எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஈஸியா பண்ணிடுவேன்; ஆனால் அந்த நேரத்தில் சிரமபட்டேன். 'அந்நியன்' ல் 'ரெமோ', 'அம்பி'யாக நடிக்க மன ரீதியாக கஷ்டப்பட்டேன். 'தெய்வத் திருமகள்' படம் பண்ணும்போது முதல் பத்து நாட்கள் மன உளைச்சலில் சிக்கி தவித்தேன்.
* சமீபத்தில் வெளியான 'சாமி 2' படம் பற்றி ?16 ஆண்டுக்கு பின் அதே போலீஸ் கேரக்டரில் கொஞ்சம் இளமையாக நடித்தேன். இந்த சாமி 1ல் இருப்பது போல் உடம்பை பராமரித்து நடிக்க கஷ்டப்பட்டேன்.
* திரை உலகில் உங்களுக்கு கிடைத்த புகழ் ?என்னை பொருத்தவரை இது சரியாக அமைந்தது என நினைக்கிறேன். முன்னாடியே எனக்கு இந்த பேரும் புகழும் கிடைச்சிருந்தா அந்த அளவுக்கு ஒரு மெச்சூரிட்டி வந்திருக்காது. தவறான முடிவுகள் எடுத்து இருப்பேன். அதனால் எல்லாமே எனக்கு சரியாக அமைந்தது.
* மகன் துருவ் பற்றி கூறுங்களேன்?வெளிநாட்டில் நடிப்பு, இயக்கம் சம்பந்தப்பட்ட படிப்பு படித்தார். அவருக்கு நடிக்க ஆசை வந்தது 'ஆதித்ய வர்மா' படம் முடிந்தது விரைவில் வெளிவரப் போகிறது. படத்தில் எதார்த்தமாக நடிக்க ஆசைப்படுவார். ஒவ்வொரு காட்சிகளையும் நுணுக்கமாக கவனித்து செய்பவர். விட்டால் எனக்கே பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார்.
* நிறைய சினிமா வாய்ப்பு வருகிறதா ?உண்மைய சொல்றேன் நிறைய கதைகள் துருவ்க்கு தான் வருகிறது. நான் இப்போது துருவ்க்கு வேலை செய்ற அளவுக்கு நிலைமை தலைகீழா மாறி விட்டது. அவர் ரொம்ப பிஸியாக இருக்கிறார்..
* துருவ் - விக்ரம், யார் ஷார்ப் ?துருவ்க்கு நல்ல கதைகள் அமைந்து தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு இடம் கிடைக்க வேண்டும். நல்ல குரல் வளமும் உள்ளது. நானே எந்த ஒரு விஷயத்திலும் ரொம்ப 'ஷார்ப்'பாக இருப்பேன். ஆனால் துருவ் என்னை விட பல மடங்கு 'ஷார்ப்'பாக இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE