பதிவு செய்த நாள் :
என் சொத்துகளை முடக்காதீங்க:
சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்

புதுடில்லி:'வங்கி கடன் மோசடி வழக்கில், தன்னுடைய மற்றும் உறவினர்களுடைய சொத்துகளை முடக்கக் கூடாது' என, வெளிநாடு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர், விஜய் மல்லையா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 என், சொத்துகளை,முடக்காதீங்க, சுப்ரீம் கோர்ட்டில்,மல்லையா, மன்றாடல்


பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா மீது,

சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து உள்ளன.இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, மல்லையா தப்பிச் சென்றார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான வழக்கு,அங்கு நடந்து வருகிறது.


விஜய் மல்லையா மீதான, பண மோசடி தொடர்பான வழக்குகள், மும்பையில் உள்ள, அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. மல்லையாவை, தப்பி யோடிய பொருளாதார குற்றவாளியாக, இந்தாண்டு, ஜன., 5ல் நீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவருக்கு சொந்த மான சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளில், அமலாக்கத் துறைஈடுபட்டு வருகிறது.


இதை எதிர்த்து, மல்லையா தொடர்ந்த வழக்கை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதனால், உச்சநீதிமன்றத்தில், மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.மனுவில் அவர்

Advertisement

கூறியுள்ள தாவது:'கிங்பிஷர் ஏர் லைன்ஸ்' விமான நிறுவனம் தொடர்பாகவே வழக்கு கள் நடந்து வருகின்றன. அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இல்லாத, என் சொத்துகள் மற்றும் என் உறவினர்களின் சொத்துகளை முடக்கக் கூடாது என, அமலாக்கத்துறைக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூலை-201921:27:52 IST Report Abuse

r.sundaramமல்லையா இந்தியா வந்தது அவர் எப்படி கடன் வாங்கினார், அந்த கடன் வாங்க யாரையெல்லாம் தாஜா செய்தார், என்ன கைமாறியது, இதற்க்கி யார்யார் உடந்தை, என்னென்ன உறுதிமொழி கொடுத்து கடன் பெறப்பட்டது, மறுபக்கம் என்னென்ன உறுதிமொழிகள் யார் கொடுத்தார்கள் என்று எல்லாம் சொல்லாத வரை இவரை விடக்கூடாது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
29-ஜூலை-201916:11:48 IST Report Abuse

Endrum Indianநிஜமாக சொன்னது "எனது குழந்தைகள் வாரிசுகளின் சொத்துக்களை முடக்கக்கூடாது என்று தான்" மேலே கூறியுள்ளபடி அல்லவே அல்ல . .

Rate this:
R S BALA - Chennai,இந்தியா
29-ஜூலை-201915:39:00 IST Report Abuse

R S BALAஎத சொல்றதா இருந்தாலும் இங்க பாடற தாண்டி வந்து நேரா பேசணும் ....

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X