பதிவு செய்த நாள் :
தடாலடி!, கர்நாடகாவில், 14 எம்.எல்.ஏ.,க்கள், பதவி, பறிப்பு

பெங்களூரு:கர்நாடகாவில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 17 பேரில், மூன்று பேரை ஏற்கனவே, தகுதி நீக்கம் செய்திருந்த சபாநாயகர், நேற்று, மற்ற, 14 எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், சட்டசபையில், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர உள்ள முதல்வர் எடியூரப்பாவுக்கு, வெற்றி எளிதாகி உள்ளது.

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்த, மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி அரசுக்கு, இம்மாத துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. காங்., மற்றும் மதச்சார்ர்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த, 16 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். மேலும், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவரும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, 'இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள், கோரிக்கை விடுத்தன.

நம்பிக்கை ஓட்டெடுப்பு


இதற்கிடையில், கடந்த, 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 17 பேரில், காங்கிரசை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவரை, சபாநாயகர், ரமேஷ் குமார், கடந்த, 25ம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 'இவர்கள், தற்போதைய சட்டசபையின் காலம் முடியும் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது; மற்ற, 14 பேரின் ராஜினாமா மீது, விரைவில் முடிவு அறிவிப்பேன்' என, அறிவித்து இருந்தார்.


சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 105 உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து, பா.ஜ., சார்பில் ஆட்சியமைக்க, அதன் மாநில தலைவரும், முன்னாள் முதலவருமான எடியூரப்பா, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரினார். கவர்னரும், ஆட்சியமைக்க, எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, கடந்த, 26ம்

தேதி மாலை, கர்நாடகா முதல்வராக நான்காவது முறையாக, எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 'சட்டசபையில் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, எடியூரப்பாவுக்கு, கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இதையேற்று, '29ம் தேதியன்று, சட்ட சபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன்' என, எடியூரப்பா அறிவித்தார்.

மேலும் தங்கள் அரசுக்கு இடைஞ்சலாக காங்.,கைச் சேர்ந்த சபாநாயகர் , ரமேஷ் குமார் செயல்படக்கூடும் என பா.ஜ.,வினர் கருதியதால் சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி விலகச் செய்யலாம் என திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் காங்., மற்றும் ம.ஜ.த., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர், ரமேஷ் குமார், அறிவித்தார். இது குறித்து, பெங்களூரில் நேற்று, அவர் கூறியதாவது: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படு கின்றனர். இதில், காங்கிரசை சேர்ந்தவர்கள், 11 பேர்; மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள்,

மூன்று பேர். இவர்களும், கட்சி தாவல் தடை சட்டத் தின் கீழ், தற்போதைய, 15வது சட்டசபையின் காலம் முடியும் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது.

மீண்டும் போட்டி



சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் போது தான், அவர்கள், மீண்டும் போட்டியிட முடியும். இவ்வாறு, சபாநாயகர் கூறினார்.அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதையடுத்து, முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பது எளிதாகி உள்ளது.

கர்நாடக சட்டசபையில், மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 224. இந்நிலையில், 17 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் ரமேஷ் குமார், தகுதி நீக்கம் செய்து உள்ளதால், சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் பலம், 207 ஆக குறைந்து உள்ளது. தற்போதைய நிலையில், பா.ஜ.,வுக்கு, 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 104 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது.

எடியூரப்பாவுக்கு ஆதரவாக, 105 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் களும்,

பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இன்று நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில், எடியூரப்பா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.சபாநாயகர் ரமேஷ் குமாரின் நடவடிக்கை, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு


சபாநாயகர், ரமேஷ் குமார், முதலில் தகுதி நீக்கம் செய்த, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி, சுயேச்சை, எம்.எல்.ஏ., சங்கர் ஆகியோர், உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர முடிவு செய்து உள்ளனர்.

இது பற்றி அவர்கள் கூறியதாவது: தகுதி நீக்கம் செய்வதாக இருந்தால், ஏழு நாட்களுக்கு முன், 'நோட்டீஸ்' அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், மூன்று நாளுக்கு முன் தான், நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர், நடுநிலை தவறி நடந்து உள்ளார். நெருக்கடி யால், இந்த முடிவை எடுத்து உள்ளார். உச்ச நீதிமன்றத் தில், இன்று வழக்கு தொடர்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினார். இவர்களை தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற, 14 எம்.எல்.ஏ.,க்களும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர் என, தெரிய வந்துள்ளது.

வெற்றி நிச்சயம்



''சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து, வெற்றி பெறுவது, 100 சதவீதம் உறுதி,'' என, கர்நாடக முதல்வர், எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூருவில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சட்டசபையில், 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதன் பின், நிதி மசோதா நிறைவேற்றப் படும்.முந்தைய கூட்டணி அரசு தாக்கல் செய்த நிதி மசோதாவில், எந்த திருத்தமும் செய்யப் போவது இல்லை. அந்த மசோதாவை நிறைவேற்றுவதே, என் முதல் பணி. இல்லாவிடில், பெரும் நிதி நெருக்கடி ஏற்படும்.இவ்வாறு, எடியூரப்பா கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
29-ஜூலை-201919:22:29 IST Report Abuse

அப்பாவிபாஜகவின் சில்லறை தனத்தால் ஆட்சி கவிழ்த்தது. சபாநாயகரையும் பணத்தால் விலைக்கு வாங்கிட்டானுக. இவனுக காவலாளிகளாம் நாட்டை காப்பாத்தறானுகளாம். சில்லறை பசங்க திருட்டு பசங்க தினமலரே சொல்ற அளவுக்கு சில்லறைத்தனம் பண்ணியிருக்கானுக.

Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
29-ஜூலை-201912:57:19 IST Report Abuse

வல்வில் ஓரிசபாநாயகர் வானளாவிய அதிகாரம் கொண்டவர்.....ரெம்ப நல்ல மனுஷனா இருக்காரு... ...நாளைக்கு எந்த கட்சியில இருப்பாரு ன்னு பார்க்கலாம்.... கர்நாடகாவுக்கு புகழ் சேர்த்த பெருமை கால்குலேட்டர் நீதிபதிக்கும் அதுக்கு அப்புறமா இந்த சபாநாயகருக்கு தான் போய் சேரனும். விஸ்வேஸ்வரைய்யா எல்லாம் அப்புறம் தான்..

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
29-ஜூலை-201915:31:45 IST Report Abuse

DSM .S/o PLM கேவலமான ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்ட குமாரசாமியை விட, எள்ளளவும் தகுதியில்லாமல் பிரதமர் நாற்காலியில் ஒன்றரை வருடங்கள் உட்கார்ந்திருந்த தேவே கவுடா இவர்களை விடவும் கர்நாடகாவிற்கு யாருமே புகழ் சேர்க்க முடியாது.. இங்கே நிறைய பேர் உண்மையே தெரியாமல் அல்லது உணராமல் அல்லது உணர்ந்து கொண்டாலும் வீம்பிற்காக அதை ஒப்புக்கொள்ளாமல், என்னவோ குமாரசாமியும் சித்துவும் நேர்மையாக நடந்து கொண்டதை போல பேசி / எழுதி வருகிறார்கள் .. ...

Rate this:
Girija - Chennai,இந்தியா
29-ஜூலை-201911:52:33 IST Report Abuse

Girijaஇதுபோல் நாடாகும் என்று நினைத்து தேர்தல் முடிவுக்கு முன்பே மூன்று எம் எல் எ தகுதி நீக்கத்திற்கு தடை வாங்கி சுடலை தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார். ஒரே மருந்து ஒருவர்க்கு விஷம் மற்றவருக்கு அமிர்தம் அதுதான் தெய்வத்தின் தீர்ப்பு . வெற்றி திலகத்தை உடனே அழித்ததற்கு. தங்கத்தமிழன் மூலம் துளசி செடி மாலைகள் போட சொன்னாலும் குச் பி நை ஹோயேகா

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X