மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ்

Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜக்கி வாசுதேவ்,ஈஷா,யோக மையம்,ஆஸ்திரேலியா,

மெல்போர்ன்: ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மெல்போர்ன் நகரில் தங்கியுள்ள அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் 'ஆஸ்திரேலியன் ஹே பீவர்' என்ற காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஜக்கி வாசுதேவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

'அலர்ஜியால் ஏற்படும் இந்த காய்ச்சல் ஏற்பட்டால் தலைவலி தும்மல் கண் மூக்கு எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும்' என்று கூறிய டாக்டர்கள் 'ஜக்கி வாசுதேவ் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்' என்றனர். இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''காய்ச்சல் ஏற்பட்டாலும் எனது நிகழ்ச்சிகள் எதுவும் ரத்து செய்யப்படக்கூடாது என முயற்சி செய்கிறேன்'' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
29-ஜூலை-201909:45:05 IST Report Abuse
ரத்தினம் யோகி ஆனாலும் மனித உடல் தான். இதை பெரிதுபடுத்தி விமர்சனம் செய்ய தேவை இல்லை. ரமணர் புற்று நோயால் இறந்தார். யோகிகள் தம்மிடம் வருபவர்களின் கர்மங்களை சில வேளைகளில் ஏற்றுக்கொண்டு நோய் வாய் படுவதும் உண்டு . இந்த உடல் கூட்டை விடுவதற்கும் காரணமாக நோயை ஏற்றுக்கொள்வர்.. .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஜூலை-201909:40:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ..கடவுள் இல்லை கொமாரு..
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
29-ஜூலை-201909:37:09 IST Report Abuse
தாண்டவக்கோன் ஆன்மிக குரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X