பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் படிப்பு: இல்லையா 'மவுசு'

Updated : ஜூலை 29, 2019 | Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி துறையை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், சிவில் நேரடி பொறியியல் சார்ந்த துறைகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.latest tamil newsமொத்த இடங்கள் 1.67 லட்சம்


மாநிலத்தில் மொத்தம், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கான பொறியியல் கலந்தாய்வு, 3 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 79 ஆயிரத்து 594 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.


latest tamil newsகம்ப்யூட்டர் சயின்ஸ் 69%

அதிகபட்சமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கு ஒதுக்கப்பட்ட 27 ஆயிரம் இடங்களில் 63 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. ஐடி துறையில் 8 ஆயிரத்து 746 இடங்களில் 69 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மெக்கானிக்கல் 36% சிவில் 24%

மெக்கானிக்கல் துறையில், 34 ஆயிரத்து 48 இடங்கள் உள்ளன. அதில், வெறும் 36 விழுக்காடு என்ற அளவில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சிவில் துறையில் 20 ஆயிரத்து 395 இடங்களில், வெறும் 23 விழுக்காடு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.


latest tamil newsஇந்த நிலையில் துணைக் கலந்தாய்வு நேற்று தொடங்கி உள்ளது. 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள போதும், 6 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


20 ஆண்டு டிரெண்டு

இது கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த மற்ற பொறியியல் படிப்புகளின் மீதான மவுசு குறைந்து, மாணவர்கள், ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளை தேடுவது அதிகரித்துள்ளதை காட்டுகிறது. ஒரு பகுதி மாணவர்கள், கலைப்பிரிவு பாடங்களை தேர்வு செய்து கலை மற்றும் அறிவியல் பிரிவு கல்லுாரிகளிலும் சேர்ந்துள்ளனர்.


இன்ஜி.,கல்லுாரிகள் மூடல்

இந்தாண்டு மட்டும் தமிழகத்தில் இருக்கம் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், 15க்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளன. சில கல்லுாரிகள் இந்தாண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
30-ஜூலை-201905:58:33 IST Report Abuse
Indhuindian In sixties there was an entrance test as well as interview. The interview was solely aimed at eliminating the candidates of a particular community in the height of so called Dravidian movement. These candidates who were otherwise meritorious found their way to IITs and RECs and proceeded to IIMs or abroad. The same is the case with those who entered institutions like GEC, MIT and so on. The left behind joined Electricity Board and now you know the reason for the palpable state of Tamil Nadu Electricity Board. Job reservations added to the inefficiency. When the engineering institutions were for private operators, many who had not even passed out of the school, with their ill gotten wealth found this as an investment opportunity and in the initial years amassed wealth by admission process. Their greed was endless. Apart from capitation fee, they charged usurious tuition fee, compelled the students to come to the college by college provided transport (again charged at exorbitant rates) and take food at the college canteen. They found every avenue to make money. Their concentration was only to improve their return on investment but not on improving the quality of education - be it facilities, be it infrastructure, be it faculty. Seeing this, others joined the bandwagon resulting in about six hundred colleges whilst the state does not need more than fifty. The craze for IT, computer science made them to ignore the fundamental engineering disciplines such as Civil, Mechanical, Electrical, Instrumentation and so on. They are quite happy to arm themselves with a degree in computer science or allied subjects and work as data entry operator in a multinational or at call centre. The parents who were deprived of engineering education for a variety of reasons, economical, reservation policies, anti brahmin attitude etc, made their wards go to these engineering colleges with a vengeance only to find the degree obtained from such sub standard institutions have no value in the job market since majority of them are not employable. In the early days till sixties, the philanthropists were genuine in promoting education and keeping their standards high. That's how Algappa Colleges, Coimbatore based engineering institutions excelled on par with Guindy or MIT. It is good that about five hundred colleges are closed and the rest made to improve their standards. Where is the faculty for these institutions. One can find a fresher from the college unable to find a decent job becoming a lecturer and goes about teaching in more than half a dozen colleges situated a Km apart from each other either on the GST or Bengaluru High Way or Tambaram - Walajabad road. They are paid measly sums and made to work for long hours and what motivation they would have to enrich their knowledge and part them with the students. AICTE has also to be blamed. How did they accord recognition without going into these aspects. Few years ago, a move was initiated by a well meant vice chancellor to identity multiple employment and identifying the infra in these institutions. Everyone knows what happened to this move. Education in the hands of uneducated and illiterate (be it politicians or others) is nothing but proverbial குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூலை-201900:43:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni படிச்சுட்டு வேலையில்லாத பட்டதாரிகளாய் வீட்டுலே குந்திருக்கும் பி இ/பி டேக் M டேக் எம்பீக்களைக் கேளுங்கள் பாவம் படிப்புக்கு நாலுவருஷம் வேஸ்ட் எல்லோராலும் பாரின் போகமுடியுதா ஏழை பெற்றோர் தன வயல்வெளிகளை விற்று படிக்கவச்சுட்டு இன்று பிள்ளைக்கு வேலை கிடைக்கலெண்ன்னு கண்ணீர் வடிக்குறாங்களே தெரியுதா ?கிடைச்ச வேலைக்கு போவோம் என்று முயற்சியும் இல்லீங்கப் பலரிடம் எவ்ளோ வீடுகளில் அம்மா சிலவீடுகளில் ஹெல்பராக வேலை பார்த்து சாப்பிடுறாங்க தெரியுமா , இதனால்தான் இருபாலா மாணவர்கள் தைரியமா நோ பி இ என்று திட்டமா இருக்குங்க WELKAM
Rate this:
Cancel
yaaro - chennai,இந்தியா
29-ஜூலை-201922:20:56 IST Report Abuse
yaaro முன்பு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருந்தது இன்ஜினியரிங் படிக்க. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தனக்கு இந்த படிப்பெல்லாம் வராது என்று எண்ட்ரன்ஸ் எழுத மாட்டார்கள், இன்ஜினியரிங் அட்மிஷன் போட முடியாது, அதனால் ஆர்ட்ஸ் ஏதாவது எடுத்து கொண்டு, அப்படியே தொழில் அல்லது அடுத்து என்ன செய்ய என்று அதாவது பிளான் செய்வார்கள். என்னைக்கு எண்ட்ரன்ஸ் ஒழிச்சு , பன்னாண்டாவது மார்க்ஸ் போதும்னு வந்துச்சோ..அப்போ ஆரம்பித்தது அழிவு காலம் பல மாணவர்களுக்கு. நானும் இன்ஜினியரிங் படிக்கிறேன் என்று கண்டகண்ட காலேஜில் சேர்ந்து அரியேர் வெச்சு எப்படியோ பாஸாகி ஒரு டிகிரி வாங்கிட்டான்..ஆனா ஒன்னும் தெரியாது ..வேலை கிடைக்காது ..இன்ஜினியரிங் படிச்சதால ப்ளூ காலர் ஜாப் போக மாட்டாரு துரை..லச்சக்கணக்கில் காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் என்று தண்டம் கட்டினது அல்லாம் வேஸ்ட். எத்தனை பேரு ஸ்விக்கி ஸ்மோடோ வண்டி ஒற்றானுகளோ ..காசெல்லாம் அடிச்சப்புறம் இப்போ ஆள் மாட்டலைன்னு காலேஜ் கிளோஸ் பண்ணறானுங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X