நான் நலமாக உள்ளேன்- சத்குரு

Updated : ஜூலை 29, 2019 | Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement

மெல்போர்ன்: 'ஆஸ்திரேலியன் ஹே பீவர்' என்னும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் பரவிய நிலையில், தான் நலமாக உள்ளேன். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.latest tamil news
38 ஆண்டுகளாக...


சத்குரு தனது முகநுாலில் வெளியிட்டுள்ள வீடியோவில், '' நான் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ளேன். இதுவரை, 38 ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ததில்லை. நாளைய (ஜூலை 28) நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் வரையில் பங்கேற்க உள்ளார்கள். கட்டாயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பேன்.


latest tamil news
ஆஸ்திரேலியன் ஹே பீவர்


இதற்கு முன் காய்ச்சல், புளூ போன்ற எந்தவொரு காய்ச்சலாலும் நான் பாதிக்கப்பட்டதில்லை. இந்த ஆஸ்திரேலியன் ஹே பீவர் மட்டும் என்ன செய்துவிடும். இந்த காய்ச்சல் என்பது உடல் நலம் பற்றியது. ஆனால், நாம் பண்பாட்டு நலம் பேணி வருகிறோம்.இதுவரை 70 சதவீதம் வரை, இயற்கையான முறையில் வாழ்கிறோம். எங்கே அமர வேண்டும், எப்படி சுவாசிக்க வேண்டும், எப்படி பணியாற்ற வேண்டும், எப்படி உடல் நலத்தை பராமரிக்க வேண்டும் என்று கட்டமைப்புரீதியில் பயணிக்கிறோம். எனினும், நவீன மருத்துவத்திற்கு நன்றி.


பண்பாட்டு நலம் :


நமக்கு தியானம், பண்பாட்டு நலம் தான் முக்கியம். நான் நலமாக உள்ளேன். நாளைய நிகழ்ச்சி நடக்கும், நான் அதில் பங்கேற்பேன்,'' என்று பேசியுள்ளார்.


latest tamil news

இன்னர் இன்ஜினியரிங்


இதனிடையே, நேற்று (ஜூலை 28) சிங்கப்பூரில் நடந்த 'இன்னர் இன்ஜினியரிங்,' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ளது. அதில், சத்குரு, மக்களிடையே உரையாற்றிக்கொண்டுள்ளார்.


நாளை மறுநாள் நாடு திரும்புகிறார்


சத்குரு ஆரோக்கியமாக இருக்கிறார் , எந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படவில்லை என ஈஷா யோகாமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நிறுவனர் சத்குரு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தியாகும்.

யோகா வகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்குரு அவர்கள் ஆஸ்திரேலியா சென்று இருந்தார். சில தினங்களுக்கு முன்பு 'ஆஸ்திரிலியேன் ஹே பீவர்' எனப்படும் காய்ச்சல் அவரை தாக்கியது. காய்ச்சலால் அவரின் உடல்நலத்தில் சற்று தொய்வு ஏற்பட்டபோதும் ஒரு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படவில்லை. மேலும், அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.


வருத்தம் அடைய தேவையில்லை


கடந்த 38 ஆண்டுகளில் சத்குரு அவர்கள் எக்காரணமும் கொண்டும் தான் பங்கேற்க இருந்த ஒரு நிகழ்ச்சியையும் ரத்து செய்தது இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சத்குரு அவர்கள் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார். ஆஸ்திரேலியா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை மறுநாள் ( 31 ம் தேதி) இந்தியா திரும்ப உள்ளார். எனவே, சத்குருவின் உடல்நலம் குறித்து யாரும் வருத்தம் அடைய தேவையில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக தொடர்புக்கு: 90435 97080, 94878 95910.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-ஜூலை-201903:11:16 IST Report Abuse
Girija நன்றி @Ram Sekar - மும்பை, நீங்கள் சொன்ன போராட்ட கோஷ்டிகள் ஊடகங்கள் எல்லாம் மிகவும் சரி (சிலவற்றை குறிப்பிடவில்லை குறிப்பாக வாரம் இருமுறை பொய், தினமும் தொல்லை காட்சி). செய்திகளின் உண்மை தன்மையை தேடி படிப்பதாக கூறினீர்கள், அப்படியானால் இவரது பூர்வீகத்தையும் தேடி தேடி படியுங்கள், பிறகு தெரியும், நிறைய புரியும். மூன்று முறை சென்று வந்ததாக கூறினீர்கள் பிறகுமா உங்களுக்கு தெரியவில்லை ரிஸர்வ்ட் பாரஸ்ட் இடம் என்று ? இதை முதலில் இவர் தான் தொடங்கி வைத்தார்.
Rate this:
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
29-ஜூலை-201922:33:26 IST Report Abuse
கொடுக்கு நீங்கள் நலமில்லாமல் இருந்தாலும் இங்கு யாரும் வருத்தப்படப்போவதில்லை , வேற வேல இருந்தா பாருங்கய்யா ...சும்மா ....
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )சிங்கப்பூர்ல உன் வேலைய மட்டும் பாரு பாவாட...
Rate this:
pandi79 - denver,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201905:28:11 IST Report Abuse
pandi79அப்புறம் என்னத்துக்கு அவர் பத்திய செய்தியை படிக்கிற ? கமெண்ட் போடுற?...
Rate this:
Cancel
29-ஜூலை-201921:10:39 IST Report Abuse
ஆப்பு யாராயிருந்தாலும் சாவை வெல்ல முடியாது. இவர் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X