அமித்ஷாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
அமித்ஷா, அற்புதம்மாள், திருமாவளவன், சந்திப்பு

புதுடில்லி : பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். உடன் தமிழக எம்.பி., திருமாவளவன் இருந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் தீர்மானம், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வசம் உள்ளது. இதில், முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இருவரும் இன்று (ஜூலை 29) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுடில்லியில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

அவர்களிடம் அமித்ஷா, இப்பிரச்னை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, தங்களிடம் உறுதி அளித்தார் என்றும், 7 பேர் விடுதலை குறித்து தங்களை யாரும் ஏமாற்ற வேண்டாம் எனவும், தனது மகன் பேரறிவாளன் விடுதலைக்காக தான் 28 ஆண்டுகள் காத்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
30-ஜூலை-201901:40:27 IST Report Abuse
sivan போலீஸ் விசாரணை அதிகாரி பேரறிவாளனை மட்டும்தான் தவறுதலாக இந்த லிஸ்டில் சேர்த்து விட்டேன். என்றார். பேரறிவாளன் அவர்கள் வீட்டின் அருகே தங்கி இருந்த சிவராசன் கும்பலுடன் பழகியவன் அவன் மூலம்தான் வெடி குண்டுக்கு தேவையான பேட்டரி வாங்கப் பட்டது. பேட்டரி என்றால் உங்கள் வீட்டுக்கு கடிகாரத்துக்கு / அல்லது டி..வீ ரிமோட்டுக்கு தேவையான . நார்மல் ஏ.ஏ பேட்டரி அல்ல. அத்துடன் பேரறிவாளனின் பெற்றோரும் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. இலங்கை புலிகளுக்கு ஆதரவளித்த தி.க கழகத்தை சேர்ந்தவர்கள். அப்படியே பேரறிவாளனுக்கு தான் எதற்காக பேட்டரி வாங்குகிறோம் என்று தெரியவில்லை என்றால் கூட.. கொலை குற்றம் சாட்ட பட்ட மற்ற ஆறு பேர்களும் தெரிந்தேதான் சிவராசனுக்கு உதவினார்கள். யாரை கொலை செய்ய போகிறார்கள் என்பது வேண்டுமானால் தெரிந்திருக்காதே தவிர.. சட்ட விரோதமாக சிவராசன் ஏதோ செய்ய போகிறான் என்பது அவர்களுக்கு தெரியும். நளினிக்கும் முருகனுக்கும் கனடாவில் வேலை வாங்கி தருவதாகவும், பெரும் தொகையுடன் கனடாவில் செட்டில் ஆகி விடலாம் என்றும் உறுதி அளித்தார்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். எவன் செத்தால் என்ன .. நாம் போய் கனடாவில் செட்டில் ஆகி விடலாம் என்ற எண்ணமே மற்ற ஆறு பேரிடமும் இருந்ததாகவே தெரிகிறது. நமக்கு தெரியாது. அற்புதத்தம்மாளும் கனடாவில் தன் மகனை செட்டிலாக்கும் ஐடியாவுடன் தன் மகனை சிவராசனுடன் பழக விட்டார்களா என்று ஆனால் மற்ற ஆறு பேருக்கும் தெளிவாகவே திட்டம் இருந்துள்ளது. அப்போது என்ன தவறு நடந்தது என்று நமக்கு தெரியாது. ஆனால் இப்போது அற்புதத்தம்மாள் செய்யும் தவறு மறுபடி மறுபடி ஏழு பேர் விடுதலை என்று பேசுவதுதான். பேரறிவாளனுக்கு மட்டும் விடுதலை கொடுக்கலாம். ஆனால் மற்றவர்கள் சிவராசனுக்கு பல வகையிலும் உதவியவர்கள். மற்ற அறுவரையும் .. பேரறிவாளனையும் ஒன்றாக வைத்து இந்த விஷயத்தில் பேச முடியாது. எனவே அற்புதத் தம்மாள் மறுபடி மறுபடி தேச விரோத இயக்கமான தி.க கழகத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதும் .. இங்குள்ள பிரிவினைவாத தமிழ் தலைவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதும் .. ஏழு பேரும் அப்பாவிகள் என்று பேசுவதும் ஏழு பேருக்கும் விடுதலை தாருங்கள் என்று கேட்பதும் தவறு. பேரறிவாளன் இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் .. தன் மகனுக்கு தனியாக கோரிக்கை விடுக்க வேண்டும். திட்டமிட்டு ராஜீவை மட்டுமல்ல அப்பாவி தமிழர்கள் இருபது பேரையும் கொன்ற சிவராசனுக்கு உதவியாக இருந்த நளினி முருகனுடன் சேர்த்து வைத்து விடுதலை விடுதலை என்று பேசுவதை கைவிட வேண்டும். இந்த படுகொலையில் இறந்தது ராஜீவ் என்ற முன்னாள் பிரதமர் மட்டுமல்ல. அத்துடன் இருபது அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இந்த படுகொலை தவறு என்றோ அதற்கு தாங்கள் வருந்துகிறோம் என்று கூட அற்புதத்தம்மாள் இது வரை சொன்னதாக தெரியவில்லை. தி,க கழகம் இந்த படுகொலை தவறு என்றோ .. விடுதலை புலிகள் அப்பாவி தமிழர்களை கொன்ற துரோகிகள் என்றோ சொல்லாது. ஆனால். இந்த அம்மாள் தான் மகனுக்கு விடுதலை வேண்டும் என்றால் .. வெகுஜன மக்கள் விரோத திக கழகத்துடன் இருந்த தன்னுடைய உறவை துண்டித்துக் கொண்டு .. தன் மகனுக்கு மட்டும் விடுதலை கோரிக்கை வைக்கலாம். அதுவும்.. இலங்கை புலிகள் தமிழர்களுக்கு செய்தது மாபெரும் துரோகம் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்துடன் .. நடந்தது பெரும் தவறு .. என்று உணர்ந்து .. தன் மகன் அப்பாவி .. எனவே விடுதலை தாருங்கள் என்று கேட்கலாம். எது எப்படி ஆயினும் சரி தி.க கழகத்துடனோ.. சர்ச்சைக்குரிய வேறு சிலரிடமோ .. அல்லது பிரிவினைவாதம் பேசுபவர்களுடனோ சகவாசம் வைத்துக் கொண்டு .. ஏழு பேருக்கும் சேர்த்து விடுதலை என்ற கோரிக்கையை இந்த அம்மாள் வைத்தார் என்றால் .இவரது மகன் ஜென்மத்திற்கும் வெளியே வர முடியாது. இதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
29-ஜூலை-201919:19:20 IST Report Abuse
Sivak எதுக்காக இந்த குருமா விழுந்து விழுந்து ஒரு கொலைகாரன் விடுதலைக்கு பாடு படுது??? சூடு சொரணையே இல்லையா?
Rate this:
Cancel
Barathan - chennai,இந்தியா
29-ஜூலை-201919:15:04 IST Report Abuse
Barathan கொலையே பண்ணி இருந்தாலும் கூட... கோர்ட் தீர்ப்பு வந்துடுச்சு. தீர்ப்பை மதிக்காம கவர்னர்.. அப்புறம் காவேரி தீர்ப்பு மதிக்கலேன்னு புலம்பல் பின்ன எதுக்கு கோர்ட் தீர்ப்பு எல்லாம்? கட்ட பஞ்சாயத்து நாடா இது?
Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-201919:46:47 IST Report Abuse
Raghuraman Narayananகோர்ட் தீர்ப்பை சற்று விவரமாக கூறுங்கள் ஐயா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X