கல்விக்கொள்கை; மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Updated : ஜூலை 29, 2019 | Added : ஜூலை 29, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி ; மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் ஆகஸ்டு 8 ல் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.latest tamil news


புதுடில்லியில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வி அமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஏற்கனவே, இணையத்தில் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இன்று ( ஜூலை 29) அந்த கால அவகாசத்தை வரும் ஆகஸ்டு 15 வரையில் நீட்டித்துள்ளது மத்திய அரசு.


latest tamil news


முன்னதாக, முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. அதன் மீது இந்திய மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த மே மாதமே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
30-ஜூலை-201912:47:29 IST Report Abuse
ganapati sb viraivil gumasthakalai uruvakum kalvimurai agandru tholil athibargalai vinjanaigalai uruvakum kalvimurai uruvaagatum vaalthukkal
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூலை-201921:15:54 IST Report Abuse
அம்பி ஐயர் ஒரு ஆலோசனையும் தேவையில்லை..... நாடு முழுவதும் ஒரே விதமான உயர் தரமான கல்வி.... அனைவருக்கும் தேவை.... அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்குங்கள்....கேந்திரிய வித்யாலயா போல அனைத்துப் பள்ளிகளையும் தரம் உயர்த்துங்கள்.....தகுதி இல்லாத ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்யுங்கள்..... ஒரே நாடு..... ஒரே சட்டம்...... ஒரே கல்வி.... ஒரே மருத்துவம்..... இதெல்லாம் அனைவருக்கும் வேண்டும்....
Rate this:
Sundar - chennai,இந்தியா
30-ஜூலை-201907:35:18 IST Report Abuse
Sundarஅம்பி அவர்களே இந்தியா ஒரு நாடு அல்ல பல தேசங்களின் ஒன்றியம்.. அவரவர் மொழிக்கு ஏற்றவாறு ஒரு தனி சிறப்பு உண்டு.. அதற்கேற்வாறு மாநிலங்களை செயல்பட அனுபதிப்போம் நீங்கள் கூறிய தரமான கல்வியை நானும் வரவேற்கிறேன் ஆனால் அதற்காக உடனே ஒரே கல்வியை கெண்டு நாடு முழுவதும் கொண்டு வர இயலாது.. தரமான வாத்தியார்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் மட்டும் எப்படி தரமான கல்வியை உடனே கற்க இயலும்.. ஒரே கல்வி என்று சொல்கிறீர்களே எனக்கு ஒரு சந்தேகம்.. உலகம் முழுக்க கணிதம் அறிவியல், கணினி, தொழிற்நூட்பம் எல்லாம் ஒரே பாடமுறை தானே.. இதில் என்ன புதிய முறை வரபோகிறது..வேண்டுமானால் இப்போதைய தொழிற் வளர்ச்சிக்கு ஏற்றவாறு சிலபஸ் மாற்றி வைக்கிலாம் மற்ற படி உலகம் முழுவதும் அடிப்படையான அறிவியல், புவியியல், கணிதம் யாவும் ஒன்று தான். அந்தந்த மாநிலத்திற்கேற்ற மொழி, கலாசாரம், பண்பாடு, கலை, இலயக்கியம், மருத்துவம், நிலவளம் இவற்றோடு வாழ விடுங்கள் அதுவே நம் நாட்டின் சிறப்பு.. இல்லை என்றால் ஐரோப்பா மாதிரி பிரானஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஜெரமன், ஸ்பெயின் போன்று, இந்தியா ஒரு கண்டம் என்று அறிவியுங்கள்.....
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
30-ஜூலை-201912:20:12 IST Report Abuse
வந்தியதேவன்அப்படியே உ.பி., ம.பி., போன்ற இந்திக்கார மாநிலங்களில் வெளியாட்கள் மாணவர்களுக்கு காப்பி அடிக்க புத்தகம், பிட் கொடுப்பதைப் போல... தமிழ்நாட்டிலும் ஒரே மாதிரி... நீட் தேர்வு முதல் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் பிட் அடிக்க “ஒரே பிட்” திட்டத்தை அமல்படுத்த வேண்டும்......
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
29-ஜூலை-201919:53:53 IST Report Abuse
J.Isaac IIT, IIM நிபுணர்கள் எத்தனை கிராமங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்திருப்பார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X