பதிவு செய்த நாள் :
மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றமா?
எம்.பி.,க்கள் புகாருக்கு வெங்கையா மறுப்பு

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், உரிய விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும், ராஜ்யசபாவைச் சேர்ந்த, 15 எம்.பி.,க்கள் கூறியுள்ள புகார்களை, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு மறுத்துள்ளார்.

 MP,எம்.பி.,புகார்,வெங்கையா,மறுப்பு


ராஜ்யசபா, எம்.பி.,க்களாக உள்ள, 14 கட்சிகளைச் சேர்ந்த, 15 பேர் ராஜ்யசபா தலைவராக உள்ள, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடுவுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதிஉள்ளனர்.அதில், 'ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது; விவாதங்கள் செய்யப்படாமலும், நிலைக்குழு அல்லது ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமலும், மசோதாக்கள் வேகமாக நிறைவேற்றப்படுகின்றன' என, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.


புள்ளி விபரம்


இந்தக் கடித விபரம், ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், ராஜ்யசபாவில், நேற்று, கேள்வி நேரத்துக்குப் பிறகு, வெங்கையா நாயுடு கூறியதாவது:எம்.பி.,க்கள் எழுதியுள்ள இந்தக் கடிதம், ஊடகங்களில் வெளியானதால், பார்லிமென்ட் ஜனநாயகம் குறித்து தவறான கண்ணோட்டம் ஏற்பட காரணமாகி உள்ளது.கடந்த, 14, 15, 16 மற்றும் தற்போதைய லோக்சபாவின்போது, மசோதாக்கள், நிலைக் குழு மற்றும் ஆய்வுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது தொடர்பான, சில புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளனர்.

லோக்சபாவில் முதலில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அவை பார்லி., குழுக்களுக்கு அனுப்பப்படாதது குறித்து இவர்கள் கேள்வி எழுப்பியிருந்ததால், அதற்கு ராஜ்யசபா தலைவராக, நான் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளேன்.ராஜ்யசபாவில் கடந்த ஐந்து கூட்டத் தொடர்களை, நான் தலைவராக நடத்தியுள்ளேன். ராஜ்ய சபாவின், 244 முதல், 248வது கூட்டம் வரை, 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், எட்டு மசோதாக்கள், பார்லிமென்ட் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. பழங்குடியினர் பிரிவில் மேலும் சில ஜாதிகளை இணைப்பது தொடர்பான மசோதா குறித்து ஆய்வு தேவையில்லை என்பதால், பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பவில்லை.


உறுதி


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, ஏற்கனவே பார்லிமென்ட் குழு பரிசீலித்த பிறகு, லோக்சபாவில் நிறைவேறியதால், அதையும், பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பவில்லை.இதன் மூலம், பார்லிமென்ட் குழுக்களுக்கு அனுப்பாமல், அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேறியது என்று, எம்.பி.,க்கள் கூறியுள்ளது தவறு என்பது தெளிவாகிறது. நடப்பு கூட்டத் தொடரிலும், நான்கு மசோதாக்கள், முதலில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மூன்று மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. இந்த மசோதாக்கள் ஏற்கனவே, பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பப்பட்டவை.

திவால் சட்ட திருத்த மசோதா, இன்னும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராஜ்யசபா எந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றும் வகையில், நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ராஜ்யசபா உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


'மைக்'கில் புகை சபை ஒத்திவைப்பு


பா.ஜ., - எம்.பி.,க்கள், 'மைக்'கில் இருந்து, புகை வந்ததை அடுத்து, ராஜ்யசபா, 15 நிமிடங்கள், நேற்று ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபா நேற்று கூடியதும், இரங்கல் மற்றும் வாழ்த்து தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த, பா.ஜ., உறுப்பினர்கள், கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் பர்ஷோத்தம் கோடாபாய் ரூபாலா ஆகியோர் முன் இருந்த மைக்கில் இருந்து, புகை வெளியேறியது.இதையடுத்து, அவர்கள் இருக்கை மாறி அமர்ந்தனர். புகை வரும் மைக்குகளை சரி செய்யுமாறு, சபை ஊழியர்களுக்கு, தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதற்காக, 15 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

உணர்ச்சிவசப்பட்ட ராஜ்யசபா தலைவர்

ராஜ்யசபா நேற்று கூடியதும், நேற்று முன்தினம் காலமான, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா முன்னாள், எம்.பி.,யுமான, காங்.,கின் ஜெயபால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நா தழுதழுக்க, கண்ணீருடன், வெங்கையா நாயுடு, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். ''நானும், ஜெய்பால் ரெட்டியும், ஆந்திரா சட்டசபையில் அருகருகே அமர்ந்திருந்தது நினைவுக்கு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக, நட்புடன் இருந்து வந்துள்ளோம். அதனால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்,'' என, வெங்கையா நாயுடு கூறினார்.Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜூலை-201919:00:14 IST Report Abuse

madhavan rajanசச்சின், மல்லையா போன்றவர்கள் ராஜ்ய சபாவிழும் நிலைக்குழுவிலும் இருந்தால் அவர்கள் என்ன விவாதித்து என்ன கருத்து கூறப்போகிறார்கள்? அதுபோல பல ஆட்களை வைத்துக்கொண்டு நாங்கள் மேதாவிகள், அரசியல் வித்தகர்கள் என்று பெருமை வேறு.

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜூலை-201918:58:10 IST Report Abuse

madhavan rajanநாங்கல்லாம் ஒரு மசோதாவை அமுலாக்குவதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்வோம். நீங்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே அதை அமுல் செய்தால் அவசரம் என்று சொல்லாமல் என்ன சொல்ல. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறக்கூட ஒரு கட்சிக்கும் நாதியில்லை என்பது வேறு விஷயம்.

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
30-ஜூலை-201916:50:00 IST Report Abuse

 N.Purushothamanஆ ஊ ன்னா சபாநாயகருக்கு கடிதம் எழுதறது ,குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதறதுன்னு ஒரு க்ரூப்பு கெளம்பி இருக்கு ...அந்த நீலிக்கண்ணீர் க்ரூப்பின் முகத்திரை கிழியும் வரை அவர்களை விடக்கூடாது ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X