பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'டிஸ்கவரி சேனல்' நிகழ்ச்சிக்காக
பிரதமர் நரேந்திர மோடி சாகச பயணம்

மும்பை: டிஸ்கவரி சேனலில் பிரபலமான, 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற நிகழ்ச்சிக்காக, தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து, பிரதமர் மோடி, அடர்ந்த காடுகளில் மேற்கொண்ட சாகச பயணம், வரும், 12ல் ஒளிபரப்பாகிறது.

ManVSWild,Bear Grylls,PM Modi,Discovery India,வனப்பகுதி,பிரதமர்,மோடி,சாகச பயணம்


வனம் மற்றும் மிருகங்களை பற்றிய தகவல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, 'டிஸ்கவரி சேனல்' நிறுவனம், மிகவும் புகழ் பெற்றது.


முக்கிய அம்சம்


இதில், மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை, பியர்ஸ் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். யாருமே இல்லாத, அடர்ந்த வனப் பகுதிக்குள்,

பியர் கிரில்சும், கேமரா மேனும் மட்டும் உள்ளே புகுந்து, அங்குள்ள ஆபத்து, சவால்களை சமாளித்து, உயிர் பிழைப்பது தான், இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். இந்த நிகழ்ச்சிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. தமிழ் உட்பட, பல்வேறு மொழிகளில், இந்த நிகழ்ச்சி,'டப்பிங்' செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட், 12ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, மேன் வெர்சஸ் வைல்டு சிறப்பு நிகழ்ச்சி, 180 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.இதில், பியர் கிரில்சுடன், பிரதமர் மோடியும் பங்கேற்று, காடுகளுக்குள் சாகச பயணம் செய்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கான முன்னோட்ட காட்சிகள், நேற்று வெளியானது. அதில், காட்டிற்குள், பியர்ஸ் கிரில்சுடன், பிரதமர் மோடி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.


விழிப்புணர்வு


இது குறித்து, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:அடர்ந்த வனப் பகுதிகள், மலைப்பிரதேசங்களில் தனியாக இருந்த அனுபவம் எனக்கு உண்டு. இந்த அனுபவம், எனக்குள் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி

Advertisement

கேட்டபோது, சம்மதித்தேன். சுற்றுச்சூழல் மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்கள் அறிந்து கொள்வதற்கும், இந்தியாவின் பழமையான, வன பாரம்பரியம், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இந்த நிகழ்ச்சி உதவும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், பியர் கிரில்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்திய பிரதமர் மோடியுடன் சாகச பயணம் மேற்கொண்டதை, பெருமையாகக் கருதுகிறேன். 'உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதது' என, கூறியுள்ளார். பியர் கிரில்ஸ், ஏற்கனவே, அமெரிக்க முன்னாள் அதிபர், ஒபாமாவுடன், இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - tamilnadeu,இந்தியா
31-ஜூலை-201919:37:50 IST Report Abuse

Tamil Selvanவேலை இல்லாகட்டி இப்படிதான் வெட்டி வேலை செய்ய தோனும் இதிலிருந்து தெரிகின்றது மோடியின் வளர்ச்சி.. சபாஷ் இந்தியா முன்னேறி வருகின்றது

Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
30-ஜூலை-201919:21:06 IST Report Abuse

K.P  SARATHIGST இன்னும் குறைந்த பாடில்லை. வேலை வாய்ப்பு வளர்ந்த பாடில்லை இவர்க்கு இது தேவையா

Rate this:
Balaji - Chennai,இந்தியா
30-ஜூலை-201919:53:36 IST Report Abuse

Balajiஇதுக்கான GST குறைய வேண்டும்? பொத்தாம் பொதுவாக அள்ளி வீசக்கூடாது. வீசிங் ப்ரோப்லேம் வரும். ...

Rate this:
spr - chennai,இந்தியா
30-ஜூலை-201918:27:42 IST Report Abuse

spr"சுற்றுச்சூழல் மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்கள் அறிந்து கொள்வதற்கும், இந்தியாவின் பழமையான, வன பாரம்பரியம், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இந்த நிகழ்ச்சி உதவும். " இதில் ஓரளவு உண்மையிருக்கிறது நம் நாட்டில் நாமாக எதனையும் முன்னெடுத்துச் செய்வது மிக அரிது யாரேனும் ஒரு பிரபலம் அது ஒரு சினிமா நடிகரோ அல்லது வேலையற்ற விளமபரம் தேடும் "பெரிய மனிதரோ" செய்தால் அடுத்த நாளே இந்த நாட்டின் இளைஞர் பட்டாளம் தானும் செய்ய முறைப்படும் கருத்துக்கள் பரிமாறப்படும் நல்ல விளம்பரம் கிடைக்கும் கொஞ்சம் நல்லதுவும் நடக்கும். அப்பபோழுதும் காங்கிரஸ் மற்றும் தீவிரவசதிகளுடன் போராடும் திரு மோடிக்கும் கொஞ்சம் மனம் ரிலாக்ஸ் ஆக ஏதேனுமொரு நிகழ்ச்சி வேண்டாமா? இந்த அனுபவம், எனக்குள் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. என்று சொன்னதால், ராஹுல் மறுபடி வருவதற்குள் கொஞ்சம் இப்படி அனுபவிக்கலாமே என்று நினைக்கிறாரோ என்னமோ

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X