சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மாஜி மேயர் கொலைக்கு காரணம் என்ன:
கைதானவர் தகவலால் போலீசார் குழப்பம்

திருநெல்வேலி : நெல்லை முன்னாள் தி.மு.க., மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில், அக்கட்சி பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை 39, கைது செய்த போலீசார், ஆயுதங்களை வீசிய இடங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் தரும் முன்னுக்கு பின் முரணான தகவலால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

மாஜி மேயர்,கொலை,காரணம்,என்ன,போலீசார், குழப்பம்


உமாமகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஜூலை 23ல் வீட்டில் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.உமாமகேஸ்வரி அணிந்திருந்த 14 பவுன் நகைகள், பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. உமாமகேஸ்வரி வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லை. அருகில் உள்ள ஓட்டலில் இருந்த கேமரா காட்சிகளில், சம்பவத்தன்று வெள்ளை நிற கார் அந்த பகுதியில் அடிக்கடி சென்று வந்தது பதிவாகியிருந்தது. அந்த கார், திருநெல்வேலியில் தி.மு.க., துணைச்செயலாளராக இருந்த சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் கார் என்பது தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன் மதுரையில் மகள் வீட்டில் வசிக்கும் சீனியம்மாளிடம் போலீசார் நேரில் விசாரித்தனர். ஆனால் கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என அவர் மறுத்தார். சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர்.


குழப்பம்


விசாரணையில் கார்த்திகேயன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறிவருகிறார். 1996ல் திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில், மேயர் பதவி தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது மாவட்ட துணைச்செயலாளராக சீனியம்மாள் இருந்தார். எனவே அவருக்குத்தான் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் கட்சியின் கோஷ்டி பூசலில், கட்சியில் பொறுப்பில் இல்லாத, உமாமகேஸ்வரிக்கு சீட் கொடுக்கப்பட்டது.

2011 சட்டசபை தேர்தலில், சங்கரன்கோவில் தனி தொகுதியில் மீண்டும் உமாமகேஸ்வரி நிறுத்தப்பட்டார். உமாமகேஸ்வரியால் தனது அரசியல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என சீனியம்மாள் வீட்டில் பேசிக்கொள்வதை சிறுவனாக இருந்த போதிருந்தே

கார்த்திகேயன் கேட்டு வளர்ந்துள்ளார். அதனை மனதில் கொண்டு, இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் முடிவுக்கு வந்தனர்.

போலீசாரிடம் கார்த்திகேயன் கூறியதாவது: சம்பவத்தன்று காலையில் உமாமகேஸ்வரி வீட்டு அருகே சென்றேன். பின் என்.ஜி.ஓ., காலனி அருகே காரை நிறுத்தவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்றேன். முருகசங்கரன் வந்து கதவை திறக்க மறுத்தார். பின் 'அம்மா உங்களிடம் பேச அனுப்பியுள்ளார்' என கூறியதால் வீட்டுக்குள் அனுமதித்தார்.வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, முதலில் உமாமகேஸ்வரியை கத்தியால்குத்தினேன். தடுக்க வந்த முருகசங்கரனையும் குத்தினேன்.

அவர் பயந்து அறைக்குள் ஓடியதும் அங்கு சென்று மேலும் குத்தினேன். அப்போது வீட்டுக்குள் வந்த பணிப்பெண் மாரியம்மாள் இதனை பார்த்து சத்தம்போட்டதால் அவரையும் கழுத்தில் குத்தி கொலை செய்தேன். பின் உமாமகேஸ்வரி அணிந்திருந்த நகைகளை பறித்ததோடு, பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன், என தெரிவித்துஉள்ளார்.ஆனால் அவர் கூறிய தகவல்களில் போலீசாருக்கு முழுமையான நம்பிக்கை வரவில்லை. இந்த கொலைகளில் மேலும் இருவர் ஈடுபட்டிருக்க வேண்டும்.

மேலும் கொலைக்கு பிறகு கத்தியையும், நகைகளையும் தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டதாக கார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் நேரத்தில் அவரது அலைபேசி எண், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் உள்ள டவரில் காட்டவில்லை. அவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை நாகர்கோவில் செல்லும் சாலையில் செங்குளம் என்னுமிடத்தில் வீசியதாக ஒருமுறை கூறியுள்ளார். ஆனால் அங்கும் தேடிப்பார்த்ததில் ஆயுதங்கள் சிக்கவில்லை. எனவே இந்த கொலையை கார்த்திகேயன் செய்திருந்ததாலும் அவர் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மேலும் விசாரணை நடக்கிறது.


சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்


இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. வடமாநில கொள்ளையர்கள், திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்று மும்பையில் பதுங்கியுள்ள கைதி அலெக்ஸ் செல்லத்துரை என பல்வேறு தரப்பினரையும் போலீசார் விசாரித்து அவர்கள் இல்லை என முடிவுக்கு வந்தனர். இறுதியாக கார்த்திகேயனை கைது செய்துள்ளனர்.

தற்போது வழக்கு திடீரென சி.பி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டிருப்பது விசாரணை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆன நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள சூழலில் ஏன் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது எனவும் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

ரத்தக்கறை படிந்த உடைகள் மீட்பு


திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனின் ரத்தக்கறை படிந்த உடைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஆயுதங்கள், நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், கொலையின் போது அணிந்திருந்த உடையில் ரத்தக்கறை ஏற்பட்டதாகவும், அதை சற்றுத்தொலைவிவில் சென்று வீசியதாகவும் கூறினார்.

அவர் கூறிய இடத்தில் ரத்தக்கறை படிந்த உடையை போலீசார் மீட்டனர். பயன்படுத்திய கத்தி, உமாமகேஸ்வரியிடம் இருந்து பறித்த நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால் கார்த்திகேயனை நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் முடிவெடுத்துள்ளனர்.

துாண்டி விடும் தி.மு.க., நிர்வாகிகள்: சீனியம்மாள் குற்றச்சாட்டு


''நெல்லை தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க., நிர்வாகிகளே துாண்டி விடுகின்றனர்'' என கைது செய்யப்பட்ட கார்த்திகேயனின் தாயாரும், அக்கட்சியின் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினருமான சீனியம்மாள் குற்றம்சாட்டினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: இவ்வழக்கில் என் மகனை கைது செய்துஉள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். அரசியல் அழுத்தத்தால் என் குடும்பம் மீது பழி போடப்படுகிறது. என் மகனை கைது செய்த போலீசார் எங்கே வைத்துள்ளனர் என தெரியவில்லை. அவர் இருப்பிடம் குறித்து தெரிவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவுள்ளேன். தி.மு.க., முன்னாள் மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன், துரை ஆகியோரால்தான் இதுபோன்ற பிரச்னை எங்களுக்கு வருகிறது.நான் மாநில நிர்வாகி. மாவட்ட நிர்வாகியிடம் 'சீட்' கேட்டு ஏன் பணம் கொடுக்க வேண்டும். எனக்கும் உமாமகேஸ்வரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும் சந்தித்து பேசுவேன், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-ஜூலை-201921:14:00 IST Report Abuse

Krishnamurthy Venkatesanசட்டம் ஒழுங்கு என் கட்சியில் சரிவர இல்லை என்று சொல்லவந்தேன் toungue ஸ்லிப் ஆகி நாட்டில் என்று சொல்லிவிட்டேன்,- stalin

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31-ஜூலை-201907:42:07 IST Report Abuse

skv srinivasankrishnaveniடங்கு ஸ்லிப்பாகினாலும் ஆவலேன்னாலும் சொன்ன வார்த்தை சொன்னதுதான் சாமானியன் இதுபோல உம்மையே உம்மக்கட்ச்சியையோ பேசிட்டு டங்கு ஸ்லிப் என்றால் கம்னுபோவியா ஐயா உங்க பரம்பரையே அப்படியேதான் உங்களாலும்ன்ன ரத்தம் மத்தவாளுக்குன்னா தக்காளி சட்னி தானே கூடவே இருக்கானுக துணைக்கு வீரமாமணி வைக்கோல்நாயுடுவும் ...

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30-ஜூலை-201918:12:54 IST Report Abuse

Gokul Krishnanஎங்க போனார் வீரமணி வைகோ குருமா : கண்ணை மூடி கொண்டார்களா

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
30-ஜூலை-201917:25:09 IST Report Abuse

narayanan iyerஇப்போ ஸ்டாலின் எதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் ? கட்சி ஆட்களிடம் பணம் கேட்டால் நலத்திட்டம் ஏதாவது நடந்தால் பணம் பார்க்கலாம் கட்சிக்கும் கொடுக்கலாம் .இப்போ எங்களின் வாழ்க்கைக்கே பணம் போதவில்லை என்று சொல்லும் நாளில், மேலும் சட்டமன்ற தேர்தல் வரும் முன் ,குறைந்தது ஒருவருடம் முன் உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் தேர்தலுக்கு பணம் பண்ண முடியும் என்கிற அவசியம்தான் அக்கறை . கலாம் அவர்களை பற்றி பேச சிறிதும் தகுதில்லாத ஸ்டாலின் சொல்கிறார் . அவர்கள் கலாம் வழியில் நடப்பார்களாம் . முடியுமா உங்களால் ? அவர் தன் பதவியில் இருக்கும் போது வாங்கிய புத்தகத்திற்கு ,அவர் குடும்பம் டெல்லி வந்தபோது ஆன செலவு தன் பணத்தில் செய்தார் . மறைவுக்கு எவனும் கேட்காமலே மக்கள் ,உலகம் அழுது ஆராதனை செய்ததே. உனக்கு நடக்குமா ? மக்கள் சிந்திக்காமல் ஒட்டு போட்டு வருகிறார்கள் திமுகவிற்கு . கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்தது திமுக . அப்படியிருக்க எப்படி கலாம் அவர்களின் பெயரை உச்சரிக்கிறாய் ?

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X