பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'சிப்' உள்ள கார்டுகளும் பாதுகாப்பானதல்ல

'சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம்., கார்டு, கணக்கின் விபரங்களை, இயந்திரம் எளிதில் தெரிந்து கொள்ளவே தவிர, பாதுகாப்பானவை இல்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிப்,கார்டு,பாதுகாப்பானதல்ல


வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களில், 'ஸ்கிம்மர்' எனும் ஏ.டி.எம்., கார்டு விபரங்களை திருடும் இயந்திரம் பொருத்தி, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 'சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டின் விபரங்களை, திருட முடியாது என, பரவலான,

ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், 'சிப்' உள்ள கார்டு, முற்றிலும் பாதுகாப்பானதாக சொல்ல முடியாது என,கூறப்படுகிறது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: கணக்கின் விபரங்களை உடனடியாகவும், எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், டெபிட் உள்ளிட்ட கார்டுகளில் சிப் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டை மிகவும் பாதுகாப்பானது என நினைப்பது தவறானது. ஸ்கிம்மர் இயந்திரத்தால், எந்த அட்டையின் விபரங்களையும், எளிதில் திருட முடியும்.ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஸ்கிம்மர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதில், வாடிக்கையாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும், கார்டுகளில், பணம் எடுக்கக் கூடிய அளவை, வாடிக்கையாளர்களே நிர்ணயிக்க

Advertisement

முடியும். அற்கான வசதி, அனைத்து வங்கிகளிலும் உள்ளன.மேலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த கார்டை, வாடிக்கை யாளர்களே 'ஸ்விட்ச் ஆப்' செய்ய முடியும். இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
30-ஜூலை-201921:18:54 IST Report Abuse

J.Isaacநடராஜன் ராமநாதன் அவர்களே நீங்கள் பெரிய அறிவாளியாக இருக்கலாம் . அதற்காக மற்றவர்களை தரக்குறைவாக , மடையர்களாக நினைக்க வேண்டாம் . இன்றும் தமிழ் நாட்டில் நகரங்களே பார்த்திராத கிராமமக்கள் உண்டு என்று உங்களுக்கு தெரியாதா?

Rate this:
Gopi - Chennai,இந்தியா
30-ஜூலை-201916:49:52 IST Report Abuse

Gopiகைரேகை ஜோசியம் பார்த்து மக்களை பணம் எடுக்க அனுமதியுங்கள். இதில் otp யம் வந்தால் தான் திரை திறக்கவேண்டும்

Rate this:
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
30-ஜூலை-201912:03:41 IST Report Abuse

சத்யமேவ ஜெயதேஒவ்வொரு பணம் எடுக்கும் அருகிலும் ஒரு காவலாளி இருக்கிறார். சிசிடிவி கமெரா இருக்கிறது. அப்புறம் எப்படி ஸ்கிம்மர் பொறுத்த முடியும் ? கருப்பாடுகளின் உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X