பொது செய்தி

இந்தியா

சரியாக பணியாற்றாத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ரயில்வே முடிவு

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (28)
Advertisement
சரியாக பணியாற்றாத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ரயில்வே முடிவு

புதுடில்லி: ரயில்வே துறையில், சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இந்த விஷயத்தில், ரயில்வே துறையும், தன் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது.






இது குறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வே அமைச்சகம் சார்பில், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ஒரு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்கள் மண்டலங்களில், 55 வயதை கடந்த மற்றும் 30 ஆண்டு பணி செய்து முடித்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.

இவர்களது பணிப் பதிவேடு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுப்பும்படி, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியல்கள் கிடைத்ததும், அதில், சரியாக பணியாற்றாதவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், ஆகஸ்ட், 9க்குள் அனுப்பும்படி, மண்டல அலுவலகங்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUL - chennai,இந்தியா
30-ஜூலை-201921:15:17 IST Report Abuse
ARUL சுமார் 10% பணிகளைத் தவிர, மற்ற அரசு அலுவல்களுக்கு , பணி அனுபவம் என்பது அத்தியாவசியமானது அல்ல, என்ற நிலைமை , கணிணிகளின் துணையோடு நடத்தப்படும் இன்றைய நிர்வாக நடைமுறைகளால் சாத்தியமாகி இருக்கும் உண்மையை எவரும் மறுக்க முடியாது. அதனால் 25 அல்லது 30 வருடங்கள் அலுவலர்களின் பணிக்காலம் என்ற பத்தாம் பசலி நடைமுறையை மாற்றி அரசு அலுவலர்களின் பணிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே என்ற திட்டம் கொண்டு வந்தால் நாட்டில் வேலை வாய்ப்பு 5 அல்லது ஆறு மடங்கு அதிகரிக்கும். 5 வருடங்கள் முடிந்ததும் , வேறு துறைகளில் வேலை தேடிக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவதால், சுய தொழில் முயற்சிகள், வியாபாரம், விவசாயம் , போன்றவை வளரும். அதே சமயம், ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசு அலுவலர்கள் , 5 வருடங்கள் கழித்து, தனியார் துறைகளில், பணி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள, 5 வருட கால பணிக்காலத்தில் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். இந்த யோசனை கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அரசு அலுவலர்களின் ஆணவத்தை அடக்கும்.அதே சமயம் நிர்வாகமும் பாதிக்கப்படாது
Rate this:
Share this comment
Cancel
30-ஜூலை-201913:24:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாய்ப்பே இல்லை , தொழிற்சங்கங்கள் போராட்டம் ஆரம்பித்து செய்யும் கொஞ்ச நஞ்ச வேலையையும் நிறுத்திவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
30-ஜூலை-201913:03:34 IST Report Abuse
sridhar இத நடை முறைக்கு கொண்டு வரட்டும் அப்புறம் பாருங்க தொழில் சங்கம் வேலை நிறுத்தம் போராட்டம் என்றெல்லாம் ஆரம்பித்து விடுவார்கள் அவங்களுக்கு வேல செஞ்சு பழக்கம் இல்லையே நல்ல சொகுசா இருந்தே பழகிட்டாங்க இதெல்லாம் போக இலவச பாஸ் வேற அப்புறம் வேற என்ன வேணும் ஓய்வுக்கு அப்பறம் இந்த இலவச பாஸ் கொடுக்கறத நிறுத்தணும் முதல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X