குப்பையால் எல்லோருக்கும் பிணி | Dinamalar

குப்பையால் எல்லோருக்கும் 'பிணி'

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019
Share
கோவையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கடைசி நாள் என்பதால், வாசகர் கூட்டம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை அலசினாள் மித்ரா.சமையல் புத்தகங்களை தேடிய சித்ரா, ''நம்மூர்ல நீர் நிலைகள் மீதான விழிப்புணர்வு, மக்கள்ட்ட நிறையாவே ஏற்பட்டுருக்கு. அங்கங்க, குளங்களை துார்வார ஆரம்பிச்சிட்டாங்க,''
 குப்பையால் எல்லோருக்கும் 'பிணி'

கோவையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கடைசி நாள் என்பதால், வாசகர் கூட்டம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை அலசினாள் மித்ரா.சமையல் புத்தகங்களை தேடிய சித்ரா, ''நம்மூர்ல நீர் நிலைகள் மீதான விழிப்புணர்வு, மக்கள்ட்ட நிறையாவே ஏற்பட்டுருக்கு. அங்கங்க, குளங்களை துார்வார ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள்.
''ஆமாக்கா, ஒவ்வொரு ஏரியாவிலும் புதுசு புதுசா அமைப்பு உருவாக்கி இருக்காங்க. ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை களப்பணி செய்றாங்க. பொதுப்பணித்துறை தரப்பிலும், புதுசா, ரெண்டு குளம் உருவாக்கப் போறாங்களாம். அதுக்கான ஏற்பாடு ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு,''''அடடே... சூப்பர்... வழக்கமா, குளத்தை ஆக்கிரமிக்கறதை வேடிக்கை தானே பார்ப்பாங்க. புதுசா குளம் உருவாக்குறதா இருந்தா, பாராட்டிதானே ஆகணும்...''''கவுசிகா நதி போற வழித்தடத்துல, 'கவுசிகா' பெயரிலேயே குளம் ஏற்படுத்தப் போறாங்களாம். இன்னொரு குளத்துக்கும் இடம் தேர்வு செஞ்சிருக்காங்க. இன்னும், 10 நாளைக்குள் முடிவாகிடும்னு பேசிக்கிறாங்க...'' என்றாள் மித்ரா.''அப்படியா, மித்து, நல்ல முயற்சி. புதுசா ரெண்டு குளம் உருவாக்கிட்டாங்கன்னா, விழா எடுத்து கூட பாராட்டலாம்,'' என, சர்ட்டிபிகேட் கொடுத்த சித்ரா, சமையல் டிப்ஸ் புத்தகம் ஒன்றை தேர்வு செய்தாள்.
இருவரும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு, கொடிசியாவில் இருந்து வெளியேறினர்.ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, பின்னால் அமர்ந்து கொண்டாள் சித்ரா. 'பன் மால்' கடந்து, ஜி.வி., ரெசிடென்சி வழியாக, திருச்சி ரோடு நோக்கி பயணப்பட்டனர்.வழித்தடத்தில், 'ஆவின்' பெயரில் இருந்த டீக்கடையை பார்த்த சித்ரா, ''வர... வர... ஆளுங்கட்சிக்காரங்க ஆட்டம் தாங்க முடியலை. எங்க பார்த்தாலும், 'ஆவின்' டீக்கடை ஆரம்பிக்கிறாங்க.
கார்ப்பரேஷன் அதிகாரிங்களும், எதைப்பத்தியும் கண்டுக்காம, அனுமதி கொடுக்கறாங்க போலிருக்கு,'' என, அங்கலாய்த்தாள்.''அக்கா, கார்ப்பரேஷன் கிழக்கு மண்டலத்துல, அசிஸ்டென்ட் டவுன் பிளானிங் ஆபீசரா மனோகரன் இருக்காரு. இவர் மேல, கலெக்டர் ஆபீசுல புகாரே கொடுத்திருக்காங்க. ஆளுங்கட்சிக்காரங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்குறாரு. மத்தவங்களுக்கு கொடுக்கறதில்லைன்னு, கலெக்டரிடமே நேரடியா சொல்லியிருக்காங்க...''''அப்படியா...?''''புலியகுளத்தை சேர்ந்த, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மகிமை ஜான், ஜி.வி., ரெசிடென்சி பகுதியில், 'ஆவின்' பெட்டிக்கடை வைக்கிறதுக்கு அனுமதி கேட்டு, விண்ணப்பம் கொடுத்திருக்காரு. 'போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறா இருக்கும்'னு சொல்லி, தள்ளுபடி பண்ணிட்டாங்க. அதே இடத்துல, ஆளும்கட்சிக்காரரு, 'பூத்' நடத்திக்கிட்டு இருக்காரு.''அதே மாதிரி, 63வது வார்டு, செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, 'பூத்' நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்காரு. வழக்கம்போல, தள்ளுபடி பண்ணிட்டாங்க. அந்த இடத்திலும், வேற ஒருத்தர், பெட்டிக்கடை நடத்திக்கிட்டு இருக்காரு.''அந்த மாற்றுத்திறனாளி, கலெக்டர் ஆபீசுக்கு போயி, டவுன் பிளானிங் ஆபீசர் மேல 'கம்ப்ளைன்ட்' கொடுத்திருக்காரு. ஆளுங்கட்சிக்காரங்களுக்கும், லஞ்சம் கொடுக்கறவங்களுக்கும்தான் இடம் தருவாங்களான்னு, கலெக்டரிடம் கேட்டிருக்காரு...''''அடடே... அப்புறம்...''''அவரை, கலெக்டர் சமாதானம் பண்ணி அனுப்பியிருக்காரு...''''ஆனா, கலெக்டரும் நெளிவு சுளிவோட நடந்துக்கிறதா கேள்விப்பட்டேனே...''''நம்மூர்ல, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை பகைச்சுக்கிட்டு, எந்த அதிகாரியும் வேலை பார்க்க முடியுமா?'' என்ற மித்ரா, ஸ்கூட்டரை திருச்சி ரோட்டுக்கு திருப்பினாள்.அவர்களை, கார்ப்பரேஷன் குப்பை லாரி கடந்து சென்றது.
அதைப்பார்த்த சித்ரா, ''ஸ்மார்ட் சிட்டி நிதியில, குப்பையில இருந்து அமுக்கறதுக்காக, 99 கோடி ரூபாயை 'ஒதுக்கி' வச்சிருக்காங்களாம்...'' என்றாள்.''அக்கா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். எனக்கு புரியலை...'' என, நோண்டினாள் மித்ரா.''கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள அள்ளுற குப்பையை, வெள்ளலுார் கிடங்குல கொட்டுறாங்க.
டன் கணக்குல குவிஞ்சிருக்கிற பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்க திட்டம் போட்டாங்க. கோடிக்கணக்குல நிதி கேட்டதுனால, அரசாங்கம் 'ரிஜக்ட்' செஞ்சிருச்சு. இப்ப, 'ஸ்மார்ட் சிட்டி' நிதியை செலவு செய்றதுக்கு, 'பிளான்' போட்டிருக்காங்க...''''அப்ப, 99 கோடி ரூபாய் அவ்ளோ தான், சொல்லுங்க...''''இன்ஜி., செக் ஷன்ல முக்கிய பொறுப்புல இருக்கற, ரெண்டு அதிகாரிங்கதான், இதுக்கு காரணமாம்.
ஏற்கனவே ஊழல் புகார்ல சிக்கி, வெவ்வேறு ஊருக்கு மாறுதலாகி, திரும்பி வந்தும், இன்னும் மாறாம இருக்காங்கன்னு, மத்த அதிகாரிங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.அப்போது, அரசு மருத்துவமனையை ஸ்கூட்டர் கடந்தது.''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவர்மென்ட் ஆஸ்பிட்டல் மருந்து குடோன்ல, தணிக்கை குழு ஆய்வு செஞ்சதாம். அதுல, காலாவதி மருந்து வாங்கி, 70 லட்சம் ரூபா வரைக்கும் நஷ்டம் ஏற்படுத்தியிருக்கறதை கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த தொகையை, அரசு கருவூலகத்துல திரும்ப கட்டச்சொல்லி, உத்தரவு போட்டிருக்காங்க. மருந்து கையாளுறவங்க பலரும் புலம்பிக்கிட்டு இருக்காங்க...''''இதே மாதிரி, கார்ப்பரேஷன்லயும் ஆய்வு செஞ்சா, கோடிக்கணக்குல பணத்தை திரும்ப வசூலிக்கலாம்...'' என்றாள் சித்ரா.''அக்கா, பொறுமையா இருங்க. நான் சொல்ல வந்ததை முழுசா முடிக்கலை...''''சொல்லு... சொல்லு, பொறுமையா கேக்குறேன்...''''கவர்மென்ட் ஆஸ்பிட்டல் நிர்வாகத் தரப்பிலும் ஒரு அதிகாரி, ஊழல் புகாரில் சிக்கியிருக்காராம். தப்பிக்கிறதுக்காக, தணிக்கை அதிகாரிகளிடம் சமரசம் பேசிக்கிட்டு இருக்காங்க.
''தப்புவாரா, சிக்குவாரான்னு தெரியலை,'' என்ற மித்ராவின், மொபைல் போனுக்கு, சவுந்தரராஜனிடம் இருந்து அழைப்பு வந்தது. 'சைலன்ட்' மோடில் போனை மாற்றி விட்டு, ஸ்கூட்டரை இயக்கினாள்.''இதே ஆஸ்பத்திரியில, டாக்டருக்கே தெரியாம, சர்ட்டிபிகேட் கொடுக்கறதுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வாங்குன விஷயம் தெரியுமா,''''என்னக்கா, சொல்றீங்க. கையெழுத்து போட்ட டாக்டருக்கே தெரியாம, பணம் வாங்கியிருக்காங்களா... அட கடவுளே... என்ன நடந்துச்சுன்னு, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...'' என, கேட்டாள்
மித்ரா.''கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல 'அட்மிட்'டாகி இறந்தவர் பெயரில் சர்ட்டிபிகேட் வாங்குறதுக்கு, அவரோட மகன் வந்திருக்காரு. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருத்தரு பேச்சுக்கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்காரு; சர்ட்டிபிகேட்டும் வாங்கிக் கொடுத்திட்டாரு. பணம் வாங்குனதை கேள்விப்பட்ட செவிலியர், டிரைவரை கூப்பிட்டு, 'லெப்ட் ரைட்' வாங்கி, பணத்தை திருப்பிக் கொடுக்க வச்சிருக்காங்க...''''அப்படியா...'' என, வாயைப்பிளந்த மித்ரா, ''கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்காங்களாமே...'' என, இழுத்தாள்.''ஆமாப்பா, பத்திரிகைகளில், கார்ப்பரேஷன் சம்பந்தமா விமர்சன செய்திகள் பிரசுரமாகிக்கிட்டு இருக்கு. அதனால, கமிஷனரை தவிர, 'மீடியா'க்களிடம் வேறு யாரும் பேசக்கூடாதுன்னு, சுற்றறிக்கை வெளியிட்டுருக்காங்க...''''அப்ப, இனி, கார்ப்பரேஷன் நாற ஆரம்பிச்சிடும்னு சொல்லுங்க,'' என்றபடி, 'மினிஸ்டர்' ஒருத்தரு ஆர்ட்ஸ் காலேஜ் திறக்கப் போறாராமே...' என, கொக்கி போட்டாள் மித்ரா.''அடடே... ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. ஈரோட்டுல புதுசா காலேஜ் கட்டியிருக்காரு. வழக்கமா, புது காலேஜ்க்கு அஞ்சு பாடப்பிரிவுக்கு மட்டும்தான் அனுமதி கொடுப்பாங்க. இந்த காலேஜ்க்கு மட்டும், 10 பாடப்பிரிவு கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்களாம்...''''மத்தவங்களுக்கு ஒரு ரூல்ஸ்; இவுங்க காலேஜ்க்கு மட்டும் ஒரு ரூல்ஸா...'' என, ஆவேசப்பட்டாள் மித்ரா.
''காலேஜ் கட்டியிருக்கிறதும் ஒரு மினிஸ்டர்; உத்தரவு போட்டிருக்கிறதும் ஒரு மினிஸ்டர். என்ன செய்றதுன்னு தெரியாம, பாரதியார் பல்கலைக்காரங்க மென்னு முழுங்கிக்கிட்டு இருக்காங்க. ''சிண்டிகேட் உறுப்பினர் ஒருத்தரு, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ஆதரவா செயல்படுறாராம்,'' என்றாள் சித்ரா. ''அப்படீன்னா, புதுசா கட்டியிருக்கிற, அரசு கல்லுாரிகளுக்கும், 10 பாடப்பிரிவு துவங்க அனுமதி கொடுத்தா, பிரச்னை தீர்ந்திருமே,'' என்றபடி, வீட்டுக்கு முன் வண்டியை, நிறுத்தினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X