சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக் காதலியுடன் ஓட்டம் அரசு அதிகாரி, 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
 கள்ளக் காதலியுடன் ஓட்டம் அரசு அதிகாரி, 'சஸ்பெண்ட்'

ராமேஸ்வரம்:அரசு குடியிருப்பில், கள்ளக்காதலியுடன் வசித்து, ஓட்டம் பிடித்த, சுற்றுலா துறை அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ், 40; மனைவி ரேகா, ஒரு குழந்தையுடன், ராமேஸ்வரத்தில், வாடகை வீட்டில் வசித்தார்.சென்னையில் யுவராஜ் பணியாற்றிய போது, அங்கு பணிபுரிந்த ஊழியரின் மனைவியான கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. கவிதாவை தன் மனைவி எனக் கூறி, ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கினார். மனைவியை தங்க வைத்துள்ள வீட்டுக்கும், அடிக்கடி சென்று வந்துள்ளார்.இதனால், சக ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
இந்நிலையில், கவிதாவுடன் யுவராஜ் மாயமானார். 13ம் தேதி, வேலைக்கு சென்ற கணவர், வீட்டிற்கு வராததால், அவரது மனைவி ரேகா, ஓட்டலில் விசாரித்தார். அப்போது தான், அவருடன் குடியிருப்பில், இதுவரை தங்கியிருந்தது, கள்ளக்காதலி என, அனைவருக்கும் தெரிந்தது.கணவரை கண்டுபிடித்து தருமாறு, 21ம் தேதி, ராமேஸ்வரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், ரேகா புகார் அளித்தார். போலீசார், சென்னை சுற்றுலாத் துறை அலுவலகம், ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, யுவராஜை, 'சஸ்பெண்ட்' செய்து, சுற்றுலாத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-ஆக-201921:03:23 IST Report Abuse
D.Ambujavalli இந்த ‘துணைவி’மட்டும்தானா, சுற்றுலா செல்லுமிடம் எல்லாம் ஊருக்கு ஒன்றிரண்டோ எத்தனை பேர் வீடுகளுக்கு விசிட் மட்டும் அடித்தானோ?
Rate this:
Cancel
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
03-ஆக-201914:42:54 IST Report Abuse
Krishnamoorthy Venkataraman சென்னையில் பணியாற்றிய போது, அங்கு பணிபுரிந்த ஊழியரின் மனைவி கவிதா. அந்த ஊழியர் என்ன ஆனார் என்று சொல்லவில்லையே?
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
01-ஆக-201920:42:11 IST Report Abuse
Ramasamy (சுயநலமாக) தன்னை மட்டுமே பார்க்கும்போது தப்பில்லை என்று தோன்றும். ஆனால் சமுதாயம் என்றும், அடுத்த தலைமுறை என்னவாகுமென்றும் யோசித்தால் தான் இது எவ்வளவு பெரிய பாவம் என்று புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X