தேசிய கல்விக் கொள்கை:கைவிட தி.மு.க.,வலியுறுத்தல்

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (48)
Advertisement
தேசிய கல்விக் கொள்கை:கைவிட தி.மு.க.,வலியுறுத்தல்

புதுடில்லி:'மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்' என, தி.மு.க., வலியுறுத்தியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியாலை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
புதிய தேசிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான வரைவை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி கல்வி திட்டம் உள்பட, இந்தக் கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களுக்கு, தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.





இந்த நிலையில், கனிமொழி தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரமேஷ் போக்ரியாலை, நேற்று சந்தித்தனர்.
தி.மு.க., தலைவர், ஸ்டாலின் எழுதிய கடிதம் மற்றும் தி.மு.க., அமைத்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை, அவர்கள் சமர்ப்பித்தனர். ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கிடைப்பதை தடை செய்யும் வகையில், இந்த வரைவு உள்ளது. மும்மொழி கல்வி முறையை திணிக்கக் கூடாது. துவக்கக் கல்வி படிக்கும் குழந்தைகளால், புதிதாக ஒரு மொழியை கற்பது கடினம். அதேபோல், 3 வயதில், துவக்கக் கல்வி என்பது குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகும்.
மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், கல்வியை, மத்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது. இந்த வரைவு, கல்வியை தனியார் மயமாக்க, வர்த்தக மயமாக்க, காவிமயமாக்குவதற்கான முயற்சியாக உள்ளது.
இட ஒதுக்கீடு குறித்தோ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை குறித்தோ, வரைவு அறிக்கையில் ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. நாடு மற்றும் மக்களின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது.
மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் நடத்தப்படும், 'நெக்ஸ்ட்' என்ற தேர்வு தேவையில்லாதது. இது, மாணவர்கள் மற்றும் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது.அதனால், இந்த வரைவு கல்விக் கொள்கையை முழுவதுமாக விலக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thai - chennai,இந்தியா
30-ஜூலை-201921:24:02 IST Report Abuse
Thai ஏன் வியாபாரம் படுத்திடுமோ ?
Rate this:
Share this comment
Cancel
30-ஜூலை-201914:12:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தேசிய கல்வி கொள்கையை எல்லாம் கைவிட முடியாது , வேண்டுமானால் தீம்கா கட்சியை கைவிட்டு விடுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
30-ஜூலை-201913:39:24 IST Report Abuse
Ravi திமுக எதிர்க்கிறது என்றாலே அது நாட்டுக்கு நல்ல திட்டமாக இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X