பொது செய்தி

இந்தியா

யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (16)
Advertisement
யாரிடமும் சொல்லாதீங்க! : ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தல்

கோவை: 'டிக்கெட் ரத்து செய்யும் பயணியர், முன்பதிவு, வங்கி கணக்கு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவுறுத்தியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணிக்கின்றனர்.

'இ - டிக்கெட்' ரத்து செய்யப்படும் பட்சத்தில், செலுத்திய கட்டணம், பயணியின் வங்கிக் கணக்கில், தானாக செலுத்தப்படும்.ரத்து கட்டணத்தை திரும்ப பெற, வங்கிக் கணக்கு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் விபரங்களை, இணையதளத்தில் பகிர வேண்டிய அவசியமும் இல்லாத நிலையில், மோசடி பேர்வழிகள், ஐ.ஆர்.சி.டி.சி., போன்ற பெயரில், போலி இணையதளங்களை உருவாக்கி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல, ரயில்வே ஸ்டேஷன்களில், அப்பாவிமக்களிடம், வங்கிக் கணக்கு உட்பட விபரங்களை, விண்ணப்பமாக பெற்று, மோசடியில் ஈடுபடுவோரும் அதிகரித்து வருவதாக, புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, 'வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் கார்டு, டிக்கெட் முன்பதிவு விபரங்களை, சமூக வலைதளங்களிலும், தனி நபரிடமும் பகிர வேண்டாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தன் இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.மேலும், 'பயணியர் ஏமாறுவதை தவிர்க்க, அதிகாரப்பூர்வ, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
30-ஜூலை-201911:19:27 IST Report Abuse
DSM .S/o PLM ஐ ஆர் சி டி சி எச்சரிக்கை மெசேஜ் அனுப்புகிறது..அனுப்புகிறது, அனுப்பி கொண்டே இருக்கிறது.. யப்பாடா போதுமடா சாமி. நேற்று முதல் இன்று காலை வரை ஒரு இருபது மெசேஜ் வந்து விட்டது ..
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-ஜூலை-201910:08:18 IST Report Abuse
A.George Alphonse பொது மக்களுக்கு அறிவுரை சொல்லும் இந்த ரைல்வேஸ் முதலில் தனது அதிகாரிகளுக்கு பொது மக்களுக்கு நல்ல சேவை செய்ய அறிவுத்தட்டும். பிறகு மக்களுக்கு இது போன்ற பாரா உஷார் எச்சரிக்கை செய்யலாம்.
Rate this:
Share this comment
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
30-ஜூலை-201916:17:09 IST Report Abuse
Sridharan Venkatramanஎதுக்கெடுத்தாலும் அரசாங்கம் மற்றும் ஊழியர்களை குறை சொல்பவனா நீ...
Rate this:
Share this comment
Cancel
sathish - Chennai,இந்தியா
30-ஜூலை-201908:06:20 IST Report Abuse
sathish Irctc, Last week i was travel to chennai to Trichy at vaigai express. Train reach at villupuram in platform no 3, Vasantham veg treat vor has sale water bottle rs 20, One of the passenger asked actual price is 15 then why your sale at 20 as he told the without any reason if interested buy if your not interested don't buy and one more vor has challenged you won't get the water bottle rs 15 in this station. This is the way irctc has treat a customer... Has reach customer care no the no was switched off. See how the irctc has help the people in railway station. First improve the food quality and give a beat price. Don't cheat the customer anymore. Jaihind
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
30-ஜூலை-201909:58:33 IST Report Abuse
Sivaஅதிகாரிகளுக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்பவும். இரண்டு நாட்களில் உங்களுக்கு பதில் கிடைக்கும். தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். citizen grievance portal பதிவு செய்தாலும் தீர்வு கிடைக்கும். இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்....
Rate this:
Share this comment
R. Vidya Sagar - Chennai,இந்தியா
30-ஜூலை-201910:19:38 IST Report Abuse
R. Vidya Sagarஇதுக்கு பேசாம தமிழிலேயே எழுதியிருக்கலாமே....
Rate this:
Share this comment
R. Vidya Sagar - Chennai,இந்தியா
30-ஜூலை-201910:20:14 IST Report Abuse
R. Vidya Sagarஅடிச்சு கேப்பாங்க, அப்பாவும் சொல்லிடாதீங்க....
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
30-ஜூலை-201916:26:26 IST Report Abuse
Gopiஉங்களால் போட்டோ எடுத்து வீடியோ எடுத்து tiktok கில் போட முடியும் போது irctc இணையதளத்தில் அந்த அழகு மூஞ்சி விற்பனையாளரின் படத்தை போடவில்லை. மேலும் கூகுளை தட்டினால் ரயில்வேயின் வாட்ஸாப்ப் ட்விட்டர் facebook லிங்க் விவரம் வருமே . இதெல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுமா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X