பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு விடுப்பு

Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (2)
Advertisement
புற்றுநோய், சிறப்பு விடுப்பு, சிகிச்சை, தமிழக அரசு, உத்தரவு

சென்னை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஒவ்வொரு முறை சிகிச்சை பெறும் போதும், அவர்களுக்கு முழு ஊதியத்துடன், 10 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, அரசு பணியாளர்கள் நலன் கருதி, தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன், 'கீமோ தெரபி, ரேடியோ தெரபி' சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், முழு ஊதியத்துடன், 10 நாட்கள், சிறப்பு விடுப்பு வழங்கப்படும்' என, சட்ட சபையில், அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார். அதன்படி, 10 நாட்கள் விடுமுறை அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துஉள்ளார். இவ்விடுப்பை பெற, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-ஜூலை-201912:50:13 IST Report Abuse
A.George Alphonse புற்று நோய் நோயாளிகளுக்கு இந்த அரசின் போற்ற தக்க, பாராட்ட தக்க அரசு நடவடிக்கை. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கு அரசின் வரப்ரசாதம்.வாழ்க தமிழக அரசு.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
30-ஜூலை-201908:59:42 IST Report Abuse
muthu Rajendran மனிதாபிமானத்துடன் வெளியிடப்பட்ட இந்த ஆணையை வெளியிட்டமைக்காக அரசை பாராட்ட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X