கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு விசாரணை

Updated : ஜூலை 30, 2019 | Added : ஜூலை 30, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement

புதுடில்லி ; தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.



latest tamil news



இன்று (ஜூலை 31) தொடங்கிய விசாரணையின் போது கருத்து தெரிவித்த, நீதிபதி, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது, என்றார். முன்னதாக வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய, முகுல் ரோஹத்கி, சபாநாயகர் செய்யவேண்டிய தகுதி நீக்கத்தை, நீதிபதிகள் செய்யமுடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.


latest tamil news



கடந்த 2017 ல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக எம்.எல்.ஏ.,க்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேர் அரசை எதிர்த்து வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்த இவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.


latest tamil news


எனவே, இந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திடக்கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைதான் தற்போது தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-ஜூலை-201921:17:43 IST Report Abuse
Cheran Perumal திமுகவில் வழக்கறிஞர்கள் வெட்டியாக இருப்பதால் தொட்டதற்கெல்லாம் வழக்கு. கோர்ட் மூலமாவது முதல்வராக முடியுமா என்று நப்பாசையில் ஸ்டாலின்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
30-ஜூலை-201917:57:47 IST Report Abuse
தாண்டவக்கோன் "வாழும்" காமராஜர், "தர்மயுத்த" வீரர் தேநீருக்கு எதிரா வழக்கா 🤔🤔🤔
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
30-ஜூலை-201916:57:10 IST Report Abuse
ஆரூர் ரங் எந்த வழக்கிலும் பாதிக்கப்பட்டவர் புகாரளித்தால் மட்டுமே கோர்ட் நடவடிக்கையெடுக்கமுடியும் . கட்சித்தாவல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்டிருக்கப்போவது அதிமுகத்தான் .அவர்களுக்கே இல்லாத வருத்தம் /குறை மற்றவர்களுக்கு எப்படி வரும்? இதனை கோர்ட் விசாரணைக்கு ஏற்றதே தவறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X