பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை தினத்தை முன்னிட்டு 10 கர்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Added : ஜூலை 30, 2019
Advertisement

துாத்துக்குடி:

மருத்துவமனை தினத்தை முன்னிட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று, 10 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினத்தை, மருத்துவனை தினமாக கொண்டாட வேண்டும் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இதன்படி, தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், 10 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் கூறுகையில்,

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் இன்று மருத்துவமனை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவெனில் மருத்துவமனை மற்றும் சுகாதார துறை சார்பாக மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. விரைவில் கேத் லேப் மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X